சசிகலா ஆதரவு தடியர்கள் அராஜகம்: தற்காப்புக்கு துப்பாக்கி எடுத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்! – வீடியோ

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலாவை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு தடிகளுடன் வந்த சசிகலா ஆதரவு தடியர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களையும், ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகனையும் தாக்கினார்கள். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

சசிகலா ஆதரவு தடியர்களிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், தன் இடுப்பிலிருந்த (அரசாங்க லைசென்ஸ் பெற்ற) துப்பாக்கியை கையில் எடுத்ததும் அந்த இடத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோ: