”கேப்மாரி’ நான் இயக்கும் கடைசி படம்”: எஸ்.ஏ.சி. அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதுவரை 69 படங்களை இயக்கியிருக்கும் முதுபெரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது தனது 70-வது பட்த்தை இயக்கி வருகிறார். இப்பட்த்தில் நாயகனாக ஜெய்,  நாயகிகளாக அதுல்யா ரவி, வைபவி ஷாண்டில்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

0a1d

அப்போது இப்பட்த்துக்கு ‘கேப்மாரி’ என பெயர் வைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் மேலும் கூறுகையில், “இது காதல், கவர்ச்சி, செக்ஸ், காமெடி கலந்த பொழுதுபோக்கு படம். இந்த பட்த்துக்கு ‘கேப்மாரி’ என பெயர் வைக்க காரணம் என்ன என்பது உங்களுக்கு இந்த படத்தை பார்க்கும்போது தெரிந்துவிடும்.

 இந்த படத்தில் நாயகன் ஜெய் ஐ.டி.துறையில் பணிபுரியும் இளைஞராக நடிக்கிறார். இந்த காலத்து இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு இளைஞன் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதையும் இப்படம் அழுத்தமாக சித்தரிக்கும்.

இந்த படம் நான் இயக்கும் 70-வது படம். ஜெய் நடிக்கும் 25-வது படம். இது நான் இயக்கும் கடைசி படம். இந்த படத்தை ஹிந்தியிலும் இயக்க இருக்கிறேன். தெலுங்கிலும் இந்த கதையை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

‘கிரீன் சிக்னல்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கவனிக்கிறார். படத்தொகுப்பை ஜி.வி.பிரசன்னா கவனிக்கிறார்.

Read previous post:
0a1a
ஹவுஸ் ஓனர் – விமர்சனம்

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக

Close