ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மீண்டும் இணையும் ‘போகன்’: 18ஆம் தேதி படப்பிடிப்பு!

பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘போகன்’.

சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ நாயகன் ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

‘தனி ஒருவன்’ படத்தின் சூப்பர்ஹிட் கூட்டணியான ஜெயம் ரவி – அரவிந்த்சாவாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது ‘போகனு’க்கு.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18ஆம் தேதி பெரம்பூர் பின்னி மில்லில் துவங்குகிறது. இதற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் சூப்பர்ஹிட் பாடல் டண்டணக்கா. அதுபோல் போகன் படத்தில் “டமால் டுமீல்… “ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மிக பிரமாண்டமான படமாக பிரபுதேவா தயாரிக்கிறார்.

Read previous post:
0a1z
சாதி அடையாளம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் மலம் போன்றது!

என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த

Close