பின்லேடன் பட விவகாரம்: தடா ரஹீம் – ஹெச்.ராஜா கூட்டு சதி அம்பலம்!

“கோடாரிக் காம்பு” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி வெட்டினால்தான் அந்த மரம் சாயும்.

அதுபோலத்தான் இஸ்லாமிய சமுதாயம் என்னும் மரத்தைச் சாய்க்க வெறுமனே காவிச்சூழ்ச்சிகளும், தூண்டுதல்களும் மட்டும் போதாது. அந்தச் சமூகத்தில் இருப்பவர்களையே அதற்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் என்னதான் தொண்டை கிழிய சிலை வணக்கம், இணைவைப்பு என்று போராடினாலும், விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு முஸ்லிம் பெண்கள் பூசை செய்வது போலக் காட்டி வெற்றி அடைந்து விடுவதே காவிச்சூழ்ச்சி!

பழனிபாபாவின் பெயரைப் பயன்படுத்தி, இந்திய தேசிய லீக் கட்சியின் பேனரை வைத்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டு, சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தன்னை வளப்படுத்தி வந்து, தன்னை இஸ்லாமிய போராளியைப் போல காட்டிக்கொள்ளும் தடா.ரஹீம், உளவுத்துறை மற்றும் சங் பரிவாரத்தின் கைக்கூலியாக செயல்படுகின்றார் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? அங்குதான் சங் பரிவாரத்தின் சூழ்ச்சி வெற்றி பெற்றிருக்கின்றது. தடா ரஹீம் சங் பரிவாரம் மற்றும் இந்திய உளவுத்துறையின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்பதற்கு சில ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

முதல் ஆதாரம்:

இஸ்லாத்தினையும் இறைத்தூதரையும் தொடர்ந்து இன்றுவரை கொச்சைப்படுத்தி விசத்தை தூவிவரும் காவிபயங்கரவாதி கல்யாணராமனை ஒவ்வொரு சகோதரர்களும் எதிர்த்து வருகின்றார்கள். அவனுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு முஸ்லிமும் லைக் போட்டது கிடையாது. ஆனால் தன்னை ஒரு தேசியக்கட்சியின் தலைவராகக் காட்டிக் கொள்ளும் கோடாரிக்காம்பு சமுதாய துரோகி தடா ரஹீம் கல்யாணராமனின் பதிவுக்கு லைக் போடுகின்றார்.

இதைப்பார்த்து அனைவருக்குமே ஆச்சரியம். ஒருவேளை கை தவறி லைக் பட்டன் விழுந்திருக்கும் என்று அனைவருமே நினைத்தார்கள். ஏன் கல்யாணராமனுக்கு லைக் போட்டார்? என்று விவாதம் பரபரப்பாகிப் போக, தேசியலீக்கில் இருக்கும் சில தொண்டர்கள் இதை அவரது பார்வைக்கு அனுப்பினார்கள். அதற்கு பதில் போட்டார் பாருங்கள். “என் வீட்டு சிறு குழந்தைகள் விளையாடும்போது கை தவறி லைக் பட்டன் விழுந்தது என்று சொல்லி மழுப்ப எனக்கென்ன பயமா? நான்தான் லைக் போட்டேன். பல நேரங்களில் கல்யாணராமனுக்கு இன்பாக்ஸில் இஸ்லாம் குறித்து (?) தகவல் கொடுப்பேன். பல கருத்துக்களை விவாதிப்பேன்” என்று சொல்லி சிம்பிளாக முடித்தார் தடா ரஹீம்.

இரண்டாவது ஆதாரம்:

கல்யாணராமனுக்கு லைக் போட்டதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஹெச்.ராசாவின் பதிவிற்கு லைக் போட்டார் தடா ரஹீம். ஹெச்.ராசாவிற்கு ஏன் லைக் போட்டார் என்று இன்றுவரை விளக்கவில்லை. அதன் பிறகுதான் தம்பி தடா ரஹீமை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துக் கண்காணிக்க ஆரம்பித்தோம்.

மூன்றாவது ஆதாரம்:

சென்ற ஹஜ் பெருநாளைக்கு ஒட்டகம் அறுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வித சிக்கலும் இல்லாமல் மிகச் சாதாரணமாக தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்ததால் அதை பயன்படுத்தி ஒட்டகத்தை அறுத்து விடலாம், அதன்பிறகு வழக்கு போடுவார்கள், அதை பார்த்துக் கொள்ளலாம் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி அமைதியாக இருந்தன.

தடையை மீறி ஒட்டகத்தை அறுப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல இடங்களில் பேசி வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் இருந்ததால் அதை மேலும் உறுதிப்படுத்த சங் பரிவார கும்பலுக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பின் மேல்முறையீடு தேவைப்பட்டது. அதற்கு களமிறக்கப்பட்டார் தடா ரஹீம். ஒட்டகத் தடையை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்வதைப் போல செய்து, தீர்ப்பை மேலும் இறுக்கமாக்கினார். ஒட்டகத்தை அறுப்பதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், கண்காணிக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் ஒட்டகம் அறுக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது தடா ரஹீமால் சாத்தியமானது. பிடி மேலும் இறுகியது.

நான்காவது ஆதாரம்:

முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் மரணத்தில் ஒரு அதீத குழப்பம் நிலவியது. பன்னீர் ஒருபுறமும், சசிகலா ஒருபுறமும் பிரிந்து நின்றார்கள். இதில் யார் காவி பயங்கரவாதிகளுக்குத் துணை போகின்றார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நம்முடைய தளத்தில் சில நிகழ்வுகளை வைத்து பன்னீர்தான் பாஜகவுடன் கைகோர்க்கிறார், அதற்காக சசிகலாவை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள் என்று எழுதினோம். சசிகலாவை குற்றவாளியாக்கி அதிமுகவில் இருந்து வெளியேற்றிவிட்டு அதிமுகவை கைப்பற்ற விதவிதமான கதைகளை காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டார்கள்.

ஜெயாவை மாடியில் இருந்து தள்ளி விட்டார் சசிகலா என்றெல்லாம காவி கம்ப்யூட்டர் படைகள் கதையெழுதின. இந்த நிலையில் இதை பூதகரமாக்க ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதற்கும் தடா ரஹீம் களமிறக்கப்பட்டார். ஜெயா மரண சந்தேகத்தைத் தீர்க்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு அப்பல்லோவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி சசிகலாவை குற்றவாளி என உறுதி செய்ய தடா ரஹீமை களமிறக்கியது சங் பரிவார கும்பல்.

ஜெயா குறித்து எவ்வித சம்பந்தமும் இல்லாத தடா ரஹீமுக்கு ஏன் இந்த அக்கறை என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஜெயாவின் அனைத்து விவகாரங்களும் நன்கு தெரிந்த திருநாவுக்கரசர் கூட ஜெயாவின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என சொல்லியபோதும் கெடா ரஹீமை அப்பல்லோ நோக்கி திருப்பி விட்டு சசிகலாவை சாய்க்கப் பார்த்தது காவி கும்பல்.

ஐந்தாவது ஆதாரம்:

ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முழுக்க முழுக்க பாஜக தான் இயக்குகின்றது என அனைவரும் அறிந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தீபாதான் வர வேண்டும் என்று தடா ரஹீம் ஊளையிட்டபோது இன்னும் கொஞ்சம் கிழிந்தது தடா.ரஹீமின் முகமூடி. இப்போது தீபா யாரால் இயக்கப்படுகின்றார் என்பது வெளிச்சமாகிவிட்ட நிலையில் இப்போதும் தீபாவை தடா ரஹீம் ஆதரிப்பது ஏனோ? சொல்லமுடியுமா?

தடா ரஹீமின் ரசிகரும் உறுப்பினருமான கப்பலாண்டி கஞ்சா அபூபக்கர் GPM இன்று வரை தீபாவை உயர்த்திப் பிடித்து அந்தப் பதிவுகளை தடா ரஹீமிற்கு டேக் செய்து விடுவது ஏனோ? சொல்ல முடியுமா?

ஆறாவது ஆதாரம்:

இதுதான் முக்கியமான ஆதாரம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையினரால் அடக்குமுறை செய்யப்பட்டு கலைக்கப்பட்டது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உண்டாக்கியது. குடியரசு தின விழாவிற்கு மெரினாவை பாதுகாக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் வேலை. அதனால்தான் மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அதை திசை திருப்புவதற்காக, தடியடி நடந்த பிறகு முதல்வர் பன்னீர் செல்வம், கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டதாக அறிக்கை வெளியிட, சொல்லி வைத்தாற் போல ஹெச்.ராசா தன்னுடைய டிவிட்டில் தேசிய லீக் தொண்டர் ஒசாமா பின்லேடன் படத்துடன் பைக்கில் செல்லும் காட்சியை வெளியிட்டார்.

TN05BC 3957 எண் கொண்ட வாகனத்தின் எண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அது ராஜி என்பவருக்கு சொந்தமானது என சோதனையில் தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்னதாக, அந்த வாகனத்தில் வந்தவர் தேசிய லீக் தொண்டர் என்றும், அது ஜாஹீர் நாயக் தடை விவகாரத்தில் நிகழ்ந்தது என்றும், தமிழக அரசுக்கு தகவல் அனுப்பினார் தடா ரஹீம். ஆனால் இதில் ஏகப்பட்ட கசமுசாக்கள் நடந்து வருவதை சம்பவங்களின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.

நேற்று இரவு(28/01/2017) தந்தி தொலைக்காட்சியில் மயிலை துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்ட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், ஒசாமா படம் ஒட்டிய வாகனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அது போலியான வாகனப் பதிவு என்றும், அந்த வாகனத்தில் வந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்றும் சொன்னார்.

மயிலை துணைக் கமிஷனர் அந்த வாகனப்பதிவு எண் போலி என்று சொல்கின்றார். ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர் என் கட்சியின் தொண்டர் என்று சொல்கிறார் தடா ரஹீம். ஒருவேளை அந்தப் படம் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருந்தாலும், இதுநாள் வரை யாருமே அந்தப் படத்தை வெளியிடாதபோது எச்.ராசா எப்படி அந்தப் படத்தை வெளியிட்டார்? அவரது கைக்கு எப்படி வந்தது?

அதுவும் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த தடியடியை நியாயப்படுத்தும் வகையில், இத்தனை நாள் பாதுகாக்கப்பட்ட படம் எப்படி வெளிவந்தது? இதை விசாரித்தால் திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது.

எச்.ராசாவிற்கு அந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால் அதை அவர் அப்போதே வெளியிட்டிருப்பார். ஜாஹீர் நாயக்கை தடை செய்ய இன்னும் அது பலமாக இருந்திருக்கும்.

ஆனால் அதுபோல எதுவும் முன்னர் வெளியாகாதபோது, தடியடி விவகாரத்திலிருந்து மோடிஜியின் அரசை காப்பாற்ற இந்தப் படத்தை தடா ரஹீமைத் தவிர எச்.ராசாவிற்கு வேறு யாருமே அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை. எச்.ராசாவுடன் தடா ரஹீம் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதற்கு இந்த பைக் விவகாரம் ஒரு ஆதாரம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ISIS டீ.சர்ட்டை மாட்டியிருந்த இளைஞர்களைத் தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஒசாமா படம் ஒட்டிய  தடா ரஹீம் மின் தொண்டரை கண்டு கொள்ளாமல் இருப்பதும், வண்டி ஓட்டியவர் என் தொண்டர் என்று தடா ரஹீம் சொல்வதும், யாரென்றே தெரியாது என்று காவல்துறை சொல்வதும், ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. அதுமட்டுமின்றி தடா ரஹீம் வாக்குமூலம் கொடுத்தும் அதை காவல்துறை சட்டை செய்யாமல் இருப்பதும், காவிகளுக்கும் தடா ரஹீமிற்கும் உள்ள உறவை பலப்படுத்துகின்றது. தடா ரஹீமை இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சதக்கத்துல்லாதான் இணைத்து வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.

பணத்துக்காக எதையும் செய்யும் கொள்கையை உடைய தடா ரஹீம், இன்றைக்கு சமுதாய துரோகியாய், சமுதாயத்தை வீழ்த்தும் கோடாரிக்காம்பாய் மாறி நிற்பதை இந்தச் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

– அகமத் கபீர்

Courtesy: koovam.in