’பிக் பாஸ்’ விக்ரமன் உண்மையிலேயே ஒரு ‘தலைவர்’ மெட்டீரியல்!

விக்ரமன் பிக்பாஸ்லாம் தாக்குபிடிப்பாரான்னு சந்தேகப்பட்டேன்; அங்க போய் என்ன பண்ணபோறாரோன்னு நெனச்சேன். But ஏதோ ஒரு வகைல நம்ம சித்தாந்த பிரச்சாரத்துக்கு யூஸ் ஆனா நல்லதுதானேன்னு தோணுச்சி…

ஆனா சும்மா சொல்லக்கூடாது… விக்ரமன் உண்மையிலேயே ஒரு ‘தலைவர்’ மெட்டீரியல்…

பொழுதுபோக்கா மட்டும் இருந்த நிகழ்ச்சி, கொஞ்சமா சமூகத்துக்கான நிகழ்ச்சியா மாத்துனதுக்கு விஜய் டீவிக்கு பாராட்டுகள். என்னதான் கமல் மேல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், இந்த சீசனை அவர் கொண்டுபோன விதத்தை வரவேற்றே ஆகணும்…

சரி நம்ம ஆள் கிட்ட வருவோம்…

“மறுபடியும் மறுபடியும் உங்ககிட்ட பேசதான் முயற்சி பண்றேன் ஆனாலும் நீங்க மூஞ்ச திருப்பிட்டு போனா, நான் வந்து வந்து பேசணுமா? அவ்ளோலாம் சுயமரியாதை இல்லாம நான் இல்ல”

இதான் விக்ரமன் முதன் முதலா சுயமரியாதைக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள வெடிச்ச இடம்.‌.

அப்பவுமே அது எனக்கு பெருசா தெரில. ஒரு சராசரி ஆளா தனக்கு எதிரான அநீதிய தட்டி கேட்டார். அவ்ளோதான்… அதுக்கு மேல அதுல பெருமை பட ஒண்ணும் இல்லனு தோணுச்சி..

ஏன்னா விக்ரமன் சராசரி ஆள் இல்ல.. அவர்கிட்ட ஒரு தலைமை பண்பு இருக்கு… அதுதான் என்னோட தேவை..

“என்னதான் இருந்தாலும் நாமெல்லாம், அவங்கள (ஷிவின்) விட ‘previleged” தானேன்னு மகேஸ்வரிகிட்ட சொன்னப்ப தான் அவரோட தலைமை பண்பு வெளிப்பட்டுச்சி.. பெருமைப்பட்டேன்.

அப்ப தொடங்கி இப்ப வரைக்கும் அவர நெனச்சி பெருமைப்படுறதுக்கான காரணங்கள் கூடிட்டே தான் இருக்கு..

விக்ரமன அவ்ளோ ஈசியா ‘ஆரி’ யோட கம்பேர் பண்ணி நெறய பேர் முதல்ல எழுதிட்டு இருந்தாங்க…

எனக்கு அதுல உடன்பாடே இல்ல! ஏன்னா ‘ஆரி’ நல்லவர் ன்றதுல மாற்றுகருத்து இல்ல.. ஆனா நல்லவரா இருக்றதால பொதுசமூகத்துல என்ன மாற்றத்த அவரால ஏற்படுத்த முடிஞ்சது? ன்ற கேள்விக்கு நியாயமான பதில என்னால எடுக்க முடில…

ஆனா விக்ரமன் கிட்ட வந்தா, அவர் நல்லவரா இருக்றதால இங்க ஒரு பெரிய உரையாடல் தொடங்கி இருக்கு..

சித்தாந்தம் இல்லாத நல்லவனால ஒரு யூஸ் ம் இல்ல..

பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடக்கிற உரையாடல்கள் பொழுதுபோக்குக்காக இருந்தது மட்டுமில்லாம, பொதுவெளியிலும் அப்டித்தான் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்துது..

விக்ரமனுடைய வருகைக்கு பிறகு தான் அங்க ஒரு அரசியல் உரையாடல் தொடங்கி இருக்கு.. அது பொதுவெளியிலும் பிரதிபலிச்சி, இன்னைக்கு இத்தன பேர் விவாதம் பண்றாங்க… அதுதான் உண்மையான வெற்றி….

“நான் நடுநிலை எல்லாம் இல்ல, பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிப்பேன்” னு சொன்னது மட்டுமில்லாம, அத ஒவ்வொரு இடத்துலயும் செஞ்சிட்டு இருந்தார் விக்ரமன்.

மலக்குழி மரணங்கள் பற்றிய நாடகத்துல அவர் சொன்ன மெசேஜ், ராஜாராணி டாஸ்க் ல சிலரை அடிமையா இருக்கணும்னு பிக்பாஸ் சொன்னப்ப, ‘அடிமை’ னு சொல்லாதீங்க, ‘சேவகர்’ னு சொல்லுங்கன்னு பிக்பாஸையே கரெக்ட் பண்ணது,

“வீட்டில் சிறந்த ஜால்ரா யார்?”னு கமல் கேட்டப்ப, “ஜால்ரா னு சொல்ல வேணாம்”னு விக்ரமன் சொல்லி முடிக்றதுக்குள்ள ‘ சரி ஒத்து ஊதுதல் னு வச்சிக்கோங்க’ னு கமலையே சொல்ல வச்சது,

“இந்த வீட்டில் இருக்க தகுதியில்லாதவர் யார்?”ன்ற கேள்வி வந்தப்ப, ‘தகுதி’ ன்ற வார்த்தை எனக்கு நெருடலா இருக்கு னு சொல்லி, வேற வார்த்தைய பயன்படுத்தி இன்னொருத்தர கை காட்டுவார் விக்ரமன்.. (தகுதி ன்ற வார்த்தை யார், யாரை நோக்கி பயன்படுத்துவாங்க னு உங்களுக்கும் தெரியும் னு நம்புறேன்)

அப்புறம், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை னு ஷிவின் சொன்னப்ப, ‘பிள்ளை’ வேணாம், அத விட்ருங்க’ னு சொன்னது,

கோர்ட் டாஸ்க்ல திருடுனவனுக்கு தண்டனை குடுக்காம, “அவங்கவங்க பொருள அவங்கவங்க தான் பாத்துக்கனும்”னு மைனா தீர்ப்பு சொன்னப்ப, “பாதிக்கப்பட்டவங்களையே குற்றவாளி ஆக்காதிங்க” னு திருத்தம் பண்ணது,

அரசாங்கங்கள் காடுகளை காப்பாத்துறோம் ன்ற பேர்ல, அதையே நம்பி இருக்ற பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை பறிச்சிட கூடாது னு பேசுனது,

அமுதவாணனோட கேவலமான உருவக்கேலி காமெடிகளை அங்கயே கண்டிச்சது,

அந்நியன் ன்ற கேரக்டர்ல உடன்பாடு இல்ல னு வெளிப்படையா சொன்னது,

பெண்களுக்கு எதிரான, இயல்பான சொல்லாடல்களாகவே மாறிப்போன வார்த்தைகளை அங்கேயே தப்புனு மறுத்தது,

“ஆம்பளன்னா அழக்கூடாது, பொம்பளன்னா சமத்தா சமைக்கனும்”ன்னு சொல்ற ஜிபி முத்து போன்ற Innocent பிற்போக்குவாதிய எதிர்த்து பேசுனது,

அசீம் என்னும் Arrogant பிற்போக்குவாதிய கிடைக்குற கேப் ல எல்லாம் மூத்திர சந்துக்குள்ள தள்ளி முக்கி எடுத்தது,

Sportiveness ன்றது நமக்கு இழைக்கப்படுகிற அநீதிகளை தட்டிகேக்காம இருக்றதுல இல்ல, ரெண்டும் வேற வேற னு சொல்லி, மிக்சர் கதிர ஆஃப் பண்ணது,

அமுதவாணனோட கலர் மண்டைய ஷாந்தி, குறிப்பிட்ட இனத்தோட பேர் சொல்லி கலாய்ச்சப்ப, அத சொல்லாதிங்கன்னு உடனடியா அவங்கள நிறுத்துனது,

பொங்கல் அன்னிக்கு ‘DD’ கிட்ட பேசும்போது “பெண்கள்லாம் சமைச்சது போதும்” னு சொன்னது,

கிடைக்குற வாய்ப்புகள்ல எல்லாம் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அண்ணா, கலைஞர்னு மேற்கோள் காட்டுனது,

இது எல்லாத்துக்கும் உச்சமா கடிதம் எழுதுற நிகழ்வுல புரட்சியாளர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதுனதுனு அவருடைய பிரச்சாரத்தினுடைய வீரியம் ரொம்ப பெருசு…

அப்றம் ஷிவின கண்ணமூடிட்டு ஆதரிக்கிறார் னு ஒரு விமர்சனம் எனக்குமே மிகச்சில நேரங்கள்ல வரும்.

நேத்து தோழர் திருமாவுக்கும், சவுக்கு சங்கருக்குமான ஒரு பேட்டிய பாத்தப்ப அந்த சின்ன விமர்சனமும் போச்சு!

அந்த பேட்டில திருமா சொல்வார், “கனியாமூர் விஷயத்துல உங்க கருத்துல நான் மாறுபடுறேன்”னு.

அதுக்கு சவுக்கு சொல்வார், “சரிங்க தோழர், ஆனா என் கருத்துல நான் உறுதியா இருக்கேன்”னு

அப்ப தலைவர் திருமா சொல்வார், “நீங்க பேசுறது உண்மையா கூட இருக்கலாம், அதுக்கான ஆதாரங்கள் கூட உங்ககிட்ட இருக்கலாம், ஆனா அதுக்காக நீங்க அதை பேசியே ஆகணும்னு ஒண்ணும் இல்ல, ஏன்னா அது ஒரு நிறுவனம், பணம் புழங்கும் இடம், அவங்களுக்கு பிரச்சனைன்னா அவங்களாலேயே அதை சமாளிக்க முடியும், நீங்க போய் தான் அவங்கள காப்பத்தணும்னு ஒண்ணும் இல்ல. ஆனா எதிர் பக்கத்துல இருக்குறவங்குளுக்கு நாம மட்டும் தான் இருக்கோம், நாம தான் பேசியாகனும், அதனால குறைந்தபட்சம் அந்த விஷயத்துல நீங்க பேசாமயாச்சும் இருந்திருக்கணும்” னு சொல்வார்….

ப்பா எவ்ளோ தெளிவு…!!!

இதையே தான் நான் விக்ரமன்- ஷிவின் விஷயத்துலயும் பாக்றேன்‌‌.. ஷிவின் கூட பல இடங்கள்ல விக்ரமன வாரி விட்டுருக்காங்க, ஆனா ஒரு இடத்துல கூட ஷிவின, விக்ரமன் வாரிவிட்டதே இல்ல, மாறா ஆதரிச்சி நின்னுருக்கார்…

இதெல்லாம் பாக்றப்ப மைனா விக்ரமன பத்தி சொன்ன ஒரு வார்த்தை தான் நியாபகம் வருது…

அந்த வார்த்தை,

“நாமெல்லாம் ஸ்டூடன்ட், அவர்லாம் வாத்தி”

– An awesome post by Maha Laxmi

——————————————————-

Added: பொங்கல் பண்டிகைக்கு பீஃப் பிரியாணி கேட்டது.. எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி பாடலுக்கு ஆட மறுத்தது… இவற்றையும் சேர்த்துக்கலாம்

இந்த விக்ரமன் Title Winner ஆகலைன்னாலும் நம்ம மனசையெல்லாம் வின் பண்ணி அப்டியே வாத்தி மாதிரி ஒசந்து ஜம்னு ஒக்காந்துட்டார் தானே மக்களே?

RAMYA BEGAM S