பிக்பாஸ்: “எதிரிகளின் அழுகை என்பது எல்லோருக்கும் கிட்டுவதல்ல!”
06.08.2017 பிக்பாஸ் – Saravanakarthikeyan Chinnadurai பதிவு
# # # # #
1) மன நலம் குன்றியோரைக் கேலி செய்த பிக்பாஸ் டாஸ்க்கை மேலோட்டமாய் கண்டிக்காமல் அடுத்து இப்படி நடந்தால் பிக்பாஸ் தனக்கு முக்கியமில்லை என்று கமல் எச்சரித்தபோது, அவரது இருபதாண்டுப் பெருரசிகனாய் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன்.
2) காதலில் உளறுபவர்களைக் கண்டாலே எனக்கு மஹா எரிச்சலாகும். விதாவா மற்றும் நீஎபொவ படங்களை நான் இடக்கையால் ஒதுக்குவது அதனால் தான். அவ்வகையில் ஓவியா திரும்பத் திரும்ப ஆரவ்வுக்கு நிஜமாகவே லவ் இல்லையா எனக் கேட்டுக்கொண்டிருப்பதும் எரிச்சலூட்டவே செய்தது. இனி இப்பிரச்சனை இல்லை.
3) பல்லு வெளக்கறது, நாக்கு வழிக்கறது, ஒண்ணுக்கு போறதெல்லாம் காட்டனுமா பிக்பாஸ்? – அதுவும் சினேகன்.
4) ஓவியாவுக்கு ஆரவ் மேல் இருந்தது புற ஈர்ப்பான காமம் மட்டும் தான் என்றே சொல்வேன். நற்காதல் வர வேறு எக்குணமும் அவனிடம் வெளிப்படவே இல்லையே! எல்லோரும் ஒதுக்கியபோதும் ஆரவ் உடன் நிற்கக் காரணம் அவனது flirting உத்தேசம் மட்டுமே. களவாணி மகேஸ் போன்ற பெண்களுக்குக் காதல் வர அது போதும். ஓவியாவுக்குமா! காதலே உலகின் ஆகக் கொடூர மன நோய் என்பது மீண்டும் உறுதிப்படுகிறது.
5) ஓவியா வெளியேறும் தகவலை பிக்பாஸ் அறிவித்ததும் ஜூலியின் முகத்தில் ஒரு நிம்மதி படர்வதை உணர முடிந்தது. (சக்தி, காயத்ரி கூட அப்படித் தெரியவில்லை.)
6) “வாராவாரம் இது பழக்கம் தானே!” என பேக் பண்ண உதவ வேண்டாம் என்ற ஓவியா மறுப்பில் தொடர் நாமினேஷன் தொடர்பான குத்தலும், விரக்தியும், வலியும், கெத்தும் சரிவிகிதம். கிளம்பும் போது “Don’t create emotional drama” என்றதும் அஃதே!
7) திரும்பிக் கூடப் பார்க்காமல் போனார் என்று உள்ளிருப்பவர்கள் புலம்புகிறார்கள். த்தா, அது ஓவியாடா!
8) அழுதபடி, “Strong contestant எல்லாமே இப்படித்தான் வெளியேற வேண்டும் போல” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார் பிந்து. போலவே, ஜுலி ஃபீலிங்காய்ப் பேசியபோது “பிறகேன் ஸாரி கேட்கல?” என்றதும் செம்ம!
9) எதிரிகளின் அழுகை என்பது எல்லோருக்கும் கிட்டுவதல்ல. ஓவியாவுக்காக ரைஸா அழுததும் குற்றவுணர்வுடன் பேசியதும் அற்புதம். Dadagiri பற்றிய கமல் கேள்விக்கான அவர் பதிலும்!
10) சினேகன் அழுததும் உணர்ந்ததும் கூட அப்படியே. (ஜுலியின் அழுகை பொய் – ஆனால் அதுவுமே ஓவியாவின் வெற்றி தான்.)
11) காயத்ரியும் சக்தியும் மட்டும் தான் இன்னும் உணரவும் இல்லை, திருந்தவும் இல்லை. வரும் வார நாமினேஷனில் இருவரில் ஒருவர் இருப்பர்.
12) இழவு வீட்டில் இறந்தார் பெருமை தூக்கலாகத்தான் இருக்கும். அப்படித்தான் பிக்பாஸ் வீட்டில் சக்தி, காயத்ரி, ஜுலியின் இன்றைய ஃபீலிங்ஸும்.
13) மீண்டும் உள்ளே வந்தாலும் (மக்கள் ஆதரவு கண்டுவிட்ட பின்) ஓவியாவிடம் ஒரு நடிப்போ, திட்டமிடலோ, முன்முடிவோ வந்து ஒட்டிக் கொள்ளும். அது ஓவியா அல்ல. அதனால் வேண்டாம் என்றே எண்ணுகிறேன்.
14) ஓவியாவின் summary குறும்படம் அபாரம். ஒரு ஊரில் அழகே உருவாய் பாடல் தேர்வும், கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்த காட்சிகளும் அருமை.
15) வெளியே வந்து சுமார் 24 மணி இடைவெளி மற்றும் சிகிச்சைக்குப் பிறகும் “ஐ லவ் ஆரவ்” என்று தான் சொல்கிறார் ஓவியா. அனுபூதி என்று நேற்று ஒரு சொல்லைப் பயன்படுத்தினார். அனுபவம் தரும் ஞானம். அது மட்டுமே இனி ஓவியாவைக் காப்பாற்றக் கூடும். காதலில் புத்திக்கு இடமேது! பட்டால் தான் புரியும்.
16) நாளை ஜூலி எவிக்ஷன் உறுதி. (At least as compensation for audience).
17) அடப்பாவி விஜய் டிவி, கடைசில கமலையே அழ வெச்சிட்டியேடா! 😞 (நாளை)
18) ஓவியா வெளியேறி விட்டார். இனி வார இறுதி தவிர பிக்பாஸ் பார்க்க வேண்டுமா என யோசனை.
# # # # #
(Thanks: Saravanakarthikeyan Chinnadurai)