காயத்ரியை காப்பாற்ற மொத்த குற்றத்தையும் இப்போது ஜூலி மீது திருப்புகிறார்கள்!

26ஆம் தேதி எபிசோடுக்கான முன்னோட்டத்தில், காயத்ரியையும் ஓவியாவையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சமாதானம் செய்வதாக காட்டப்படுகிறது.

இரண்டு முறை பச்சையாக பொய் சொன்ன காயத்ரியை நேக்காக நழுவ விட்டதைப் போல், காயத்ரி மேல் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்பை தணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இது படுகிறது.

பொத்தி பொத்தி காயத்ரியை பாதுகாக்கும் லாபி எது… ?

JEYACHNANDRA HASHMI

# # #

பரணியை ‘பொம்பள பொறுக்கி’ன்னு சொல்லும்போது பரணி மேல வராத அக்கறை, காயத்ரி ஒரு சில்றன்னு தெரிய வரும்போது அவளோட கேரக்டர மாற்ற முயற்சிப்பது அயோக்கியத்தனம், இல்லையா?

எல்லா வகையிலும் கீழ்மையான ஒரு கேரக்டரை நல்லவிதமாக போர்ட்ரைட் செய்ய நினைப்பது எதனால்?

‘காயத்ரி சுலபமாக எல்லாரிடமும் ஏமாந்து போகிறாள்’ என்று வழக்கின் போக்கை திசை திருப்பி, மொத்த குற்றத்தையும் இப்போது ஜூலி மீது திருப்புகிறார்கள்.

ஓவியாவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கிற்கு இப்போது அவளை தொட முடியாது என்று நன்றாக தெரிந்துவிட்டது. ஆகவே, அடுத்த பலியாடு ஜூலி..

ஜூலிக்கு இது தேவைதான் என்றாலும், காயத்ரியை திடீர் நல்லவளாக எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் செய்த சில்றத்தனத்த எல்லாம் குறும்படமாக கமல் போட்டுக் காண்பித்தாலே பிம்பச்சரிவு ஏற்பட்டு, அடுத்த வாரமே எவிக்ட் ஆகிவிடுவாள்…

விஜய் டிவிக்கும், கமலுக்கும் காயத்ரியால் என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு நெருக்கடி இருக்கிறது…

MEENAMMA KAYAL

 

Read previous post:
0a1a
“கண்ணுல தண்ணி வருதான்னு செக் செஞ்சுக்கிட்டேன்”: ஓவியாவின் இன்னொரு அருள்வாக்கு!

‘நான் அழல. கண்ணு வேர்க்குது’ என்பதற்கு நிகரான சமாளிப்பு, “கண்ணுல தண்ணி வருதான்னு செக் செஞ்சுக்கிட்டேன்.” சோகத்தை சுமையாக்கி எழவு கொட்டாமல் சுய பகடியாகவும், தத்துவமாகவும் ஆக்கும்

Close