“ஆண்டவா… ஓவியாவை காப்பி அடிப்பவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று…!”
பிக்பாஸ்: 21.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்…
# # # # #
காசி விஸ்வநாதன்:
பிக்பாஸ்… நீங்க சுஜாவுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் எதாவது இருந்தால் அதை தனியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் வேண்டாம்…
சுஜா… உன்னை சப்போர்ட் பண்ணி முதல்நாளே பதிவு போட்டவன் என்ற அடிப்படையில் சொல்லுறேன்:
நீ ஓவியா மாதிரி, அஞ்சலி பாப்பா மாதிரி நடிக்காமல், நீ நீயாக இருந்தால் கண்டிப்பாக நான் மட்டும் அல்ல, மக்களும் உன்னை சப்போர்ட் பண்ணுவார்கள்.
இல்லையினா, மொத்தமும் நக்கிக்கிட்டு போயிடும்…!
# # #
JAYASHREE GOVINDARAJAN:
ஆண்டவா…! ஓவியாவை பிரதியெடுப்பவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று! ஓவியாவின் விரோதிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்…!
# # #
SENTHIL R:
சுஜா… உன் சொந்த வாழ்க்கையில் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டுப் போ. ஆனால், பிக்பாஸில் உன் சொந்தக்காலில் நில்லு. உன் ஒரிஜினாலிட்டியை காட்டு. ஓவியாவை காப்பி அடிக்காதே.
எப்பவும் அசலுக்குத் தான் மரியாதை. நகலுக்கு கிடைக்கும் இடம் குப்பைத் தொட்டி தான்.
வானத்தில் ஒரேயொரு சூரியன் தான். பிக்பாஸில் ஒரேயொரு ஓவியா தான்…
புரிஞ்சுக்கோ.
மறுத்தா… செஞ்சிருவோம்…!
# # # # #
JAYASHREE GOVINDARAJAN:
வையாபுரி குறித்து ரைஸா மூன்று குற்றச்சாட்டுகள் சொன்னார்:
முதலாவது – செல்ஃபி எடுத்து சொந்தக் கதை சொல்வது. அதில் உண்மையில் சக்தியைவிட வையாபுரியின் பெர்ஃபாமன்ஸே அருமை. ஓவியா உள்பட அனைவரும் ரசிக்கவே செய்தார்கள்.
இரண்டாவது – என்னவென்றே புரியவில்லை.
மூன்றாவது – “கட்டிப்புடி பாடல்”, அவர் தனக்காக பாடவில்லை. (நமீதா தொடங்கி மற்றவர்கள் ஹக் பண்ண வந்தாலும் கையெடுத்துக் கும்பிட்டுவிடுவார்.) மற்றவர்கள் கணேஷை கிண்டல் செய்துகொண்டிருந்தபோது கணேஷுக்காகப் பாடியது.
ஒருவரை வெறுப்பது என்று முடிவு செய்துவிட்டால் எல்லாவற்றையும் குற்றக்கணக்கில் எழுதுவது சுலபம். அதிலும் கேரக்டர் அசாஸினேஷன் மிகச் சுலபம். (கிட்டத்தட்ட அப்படியே ஆரவ்வையும் ரைஸாவையும் ஹரீஷ் வந்திருந்தபோது சேர்த்துவைத்துப் பேசினார். ஆனால் அது தவறாகவில்லை. அடப்போங்கப்பா!)
#
வையாபுரிக்கு 25 ஓட்டு.
சினேகனுக்கு 25 ஓட்டு.
பை… பை… ரைஸா…!
# # #
SENTHIL R:
ரைஸா… ‘விஐபி-2’ படத்தில் வில்லிக்குப் பின்னால் கையில் ஒரு பேடுடன் வரும் பி.ஏ.வாக, ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல் நடிச்சிருக்கும் நீ, பிக்பாஸில் ஓவரா தான் அலட்டிக்கிற…
உன் பெட்டி – படுக்கை, மேக்கப் ஐட்டம் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா இரு…
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தான் உனக்கு கடைசி வாரம்…!
# # # # #
JAYASHREE GOVINDARAJAN:
இருக்கிற பிரச்சினைகள் காணாது என்று காஜல், ஆரவ்வுக்கும் ரைஸாவுக்கும் இடையில் செய்ய நினைக்கும் குழப்படி என்ன? (“நீங்க சூப்பர் ஜோடி… அவனுக்கு உன்மேல இண்ட்ரஸ்ட் இருக்குன்னு எனக்கு பட்சி சொல்லுது…” பிளா… பிளா…!)
# # #
SENTHIL R:
காஜல்… நீ கொடுத்த பில்டப் எல்லாத்தையும் பாத்து, வடசென்னையில் கஞ்சா வித்துக்கிட்டிருந்த ரவுடிப்பொண்ணு போலன்னு நினைச்சேன்…
ஆனா, ஆரவ்வையும், ரைஸாவையும் நைசா கோர்த்துவிட நீ முயற்சி பண்ணுவதை பார்த்த பிறகு தான் தெரிஞ்சது… வெளியே நீ மாமா வேலை பார்த்துக்கிட்டிருந்தேனு…!
அவளா நீ…!
# # # # #
காசி விஸ்வநாதன்:
தம்பி ஹரிஷ்… உங்கள நான் ரொம்ப அட்மைர் பன்றேன்… நீங்க ஜொள்ளு விட வேண்டிய சக வயதுள்ள அந்த இரண்டு பெண்களை (ரைஸா, பிந்து மாதவி) நீங்கள் இந்த வார எவிக்சனுக்கு நாமினேட் பண்ணியதற்கும், உங்களுக்கு இவர்தான் போட்டி என்று எல்லோரும் நினைத்த அந்த சக வயதுள்ள தம்பி (ஆரவ்) இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பார் என்று கூறியதற்கும்…!
இந்த குவாலிட்டி உங்களது உண்மையான அடையாளமாக இருந்தால், அது கடைசிவரை உங்களிடம் இருந்தால், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் நீங்கள்தான்.
#
ஆரவ்… இவ்வளவு நாள் நீ சினேகனை “ப்ரோ”, “கவிஞர்”னுதானே சொல்லிட்டு இருந்த…!
இன்னைக்கு என்ன கன்ஃபெக்சன் ரூம்ல “சினேகன்”னு பேர் சொல்ற…?
அடுத்த வாரம் உனக்கு இருக்கு…!
# # # # #
MICHAEL ARUN:
Viewers should be given WINNER title for watching “mokkai” episodes like today…
# # # # #