“இந்த சென்னை வங்கி கிளைக்கு ஒரு பிக் சல்யூட்! இது பரவட்டும்!”

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆர்.கே நகர் கிளை, மந்தைவெளியில் கேஷியராகப் பணிபுரியும் திரு.சரவணகுமார் பகிர்ந்துகொண்ட பதிவில் ஒரு பகுதி இது:

”நாங்கள் மிகவும் தெளிவாக முன்கூட்டியே திட்டமிட்டோம். அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாள் முதல் பணம் குறையக் குறைய Currency Chest -லிருந்து எடுத்து வந்து பொதுமக்களுக்கு கொடுத்து வந்தோம். முடிந்த வரையில் ரூ.50, 20, 10 என சில்லறைகளாக கொடுக்க முயற்சித்தோம்.

நேற்று கூட்டம் அதிகமாகி மக்கள் ரோட்டிற்கு வரும் நிலை ஆகி விட்டது. இதனால் இன்று முதல் பணம் கட்டுவது – எடுப்பது இரண்டையும் வங்கியிலும், பணம் மாற்றுவதை பக்கத்திலுள்ள ஒரு மண்டபத்திலும் வைத்துக் கொண்டோம். அனைவரையும் சேர் போட்டு உட்கார வைத்து, வரிசைப்படி பணத்தை மாற்றிக் கொடுத்தோம்.

மக்களும் ஃபேனுக்கு கீழே உட்கார்ந்து அமைதியாக வாங்கிச் சென்றனர். அவர்களுக்கும் மகிழ்ச்சி! எங்களுக்கும் மன நிம்மதி!”

இந்த வங்கியின் மேனேஜர் மற்றும் செயல்படுத்திய சக ஊழியர்கள் அத்தனை பேருக்கும் ஒரு பிக் சல்யூட்! இது பரவட்டும்! இப்போதைய தேவை இதுதான்!

பட்டுக்கோட்டை பிரபாகர்

எழுத்தாளர்

Read previous post:
0a1a
This experiment will see much bloodshed and several heads will roll

Ever since the demonetisation of Rs 500 and Rs 1,000 currency notes wasannounced by Prime Minister Narendra Modi on November 8,

Close