மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’

கிரேஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரஃபீக் முஹம்மது இயக்கத்தில், புதுமுகம் ரவிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ‘ஆயிஷா’. இதில் கதாநாயகியாக ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் மதுமிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரமேஷ் கண்ணா, முத்துக்காளை நடிக்கிறார்கள்.

லெனின் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவிஷ்ணு படத்தொகுப்பை மேற்கொள்ள, நடன இயக்குனராக பவர் சிவாவும், இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் தேவாவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் திரையரங்கில் இன்று (19.01.2019) பூஜையுடன் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு தலைவர் ஜாகுவர்தங்கம், தயாரிப்பாளர் – ஊடகத் தொடர்பாளர் விஜய்முரளி, கதாசிரியர்  கலைஞானம், நடிகர் வையாபுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இப்படம் குறித்து இயக்குனர் ரஃபீக் முஹம்மது பேசுகையில், “மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

Read previous post:
0a1b
“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்!” – இயக்குனர் மீரா கதிரவன்

தமிழ் சினிமாவில் தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் 'அவள் பெயர் தமிழரசி' என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர்

Close