“என்னடா பெண் இவ”: ஏஞ்செல் மியூசிக் வீடியோ பாடல்!

பேரழகினை கண்டு வியக்கும் ஒருவன், தூரத்தில் நின்றே தூவான மழையினில் மகிழ்கிறான். தேவதையை தேடி அடைய நினைக்கையிலோ அவளின் சிறகின் தென்றல் அசைவினில் சிதறிப் போகிறான்.

வானம்பாடியாய் பாடித் திரியும் பாடகன், வான தேவதையை நேரில் கண்டபின் அவளின் கரம் பிடித்து காலமெல்லாம் வாழ எண்ணுகிறான். ஆனால், இவன் அவளை காணும் போதெல்லாம் எதிர்மறையாய் காணுகிறான். அவனின் எண்ணம் என்ன, அவளின் வாழ்க்கை இவனுக்கு என்ன சொன்னது என்பதே இந்த ஏஞ்சல் இசைப் பாடல்.

தேவதைகள் இன்பத்தை பகிரும் ஆச்சரியம். வாழ்வின் இனிய தருணங்கள் ஒவ்வொரு நொடியும் செறிந்து மகிழ்வூட்டினால் இனியென்ன துன்பம்.

பிரவீன் செபாஸ்டியனின் முதல் தனிப் பாடல் ஏஞ்செல் (Angel). மிக சிறப்பான இசை கலவை, இசைக் கோர்ப்பு, கேட்பவர் மனதை நெகிழச் செய்கிறது. மிக இயல்பான வரிகளும் படமாக்கப்பட்ட முறையும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. துள்ளலான இசைப்பாடல், சிறு காதல் இயல்புகளுடன் இணைந்த இந்த தனிப்பாடல் மிக சிறந்த எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் விதைக்கும்.

இப்பாடலை புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே  குறும்படங்களின் மூலமும், சென்னை பேச்சுலர்ஸ் பாடலின் மூலமும் பரவலாக அறியப்படுபவர்.

இப்பாடலினை ம.தொல்காப்பியன் எழுத,   விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஜெகதீஸ் மற்றும் சின்னா பாடியுள்ளனர்.

கார்த்திக் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ கந்தன் எடிட்டிங் செய்துள்ளார்.

Positive Minds  Entertainment  மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ:

Read previous post:
s7
Sri Green Productions – Production No 4 Pooja

Close