“நானும் ஒரு தி.க. – தி.வி.க. – த.பெ.தி.க. காரன் தான்!” – ஆளூர் ஷா நவாஸ்

திராவிடர் விடுதலைக் கழக தோழர் பாரூக் கொலை வழக்கில், கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், 31 வயதுள்ள அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார்.

இதே கொலையை ஆர்.எஸ்.எஸ் சக்திகள் செய்திருந்தால் இன்று என்னென்ன ஆர்ப்பாட்டம் நடந்திருக்குமோ, அதே சினத்தை இதிலும் வெளிப்படுத்துவோருக்குத்தான் மதவெறியைக் கண்டிக்கும் தகுதி உண்டு.

முஸ்லிம் சமூகத்தில் பிறந்த ஒருவன், மைய நீரோட்டக் களத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் பயணிப்பதை சகிக்க முடியவில்லை எனில், அந்த சகிப்பின்மையும் அப்பட்டமான மதவெறியே.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி இயக்கங்களில் செயலாற்றுவது குற்றமெனில், நான் உறுதிபடக் கூறுவேன்; நானும் ஒரு தி.க – தி.வி.க – த.பெ.தி.க காரன்தான்.

தோழர் பாரூக்கை இழந்துவாடும் பெரியாரிய தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரை கொடூரப் படுகொலை செய்த வெறியனுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ALOOR SHA NAVAS

Read previous post:
0
மனிதத்தை நேசித்த தி.வி.க. நிர்வாகி ஃபாருக் படுகொலை: முஸ்லிம் இளைஞர் சரண்!

கோவையில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அன்சாத் என்ற முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை

Close