அதிமுக பொதுக்குழுவில் ‘ஒற்றை தலைமை’க்கான தீர்மானம் நிறைவேற்ற தடை – உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையில் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம்; அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் கொடுத்த 23 தீர்மானங்களை விவாதித்து நிறைவேற்றிக்கொள்ளலாம்; இவை தவிர, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை ‘ஒற்றைத் தலைமை’யாக தேர்வு செய்யும் தனித் தீர்மானம் உள்ளிட்ட வேறு எந்த தனித் தீர்மானத்தையும் விவாதிக்கலாம்; ஆனால் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிகாலை 4 மணியளவில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.