“என்னை ‘தல’ என்றோ, வேறு பட்டப் பெயராலோ அழைக்க வேண்டாம்”: நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

பிரபல நடிகர் அஜித்குமார் தனது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மூலம் இன்று (01-12-2021) ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

’தல’ என்றோ, வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

அஜித்குமார்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

Read previous post:
8
“ஆண் பெண் உறவை பேசும் படம் ’பேச்சிலர்”: நாயகன் ஜி.வி.பிரகாஷ் பேச்சு

GV பிரகாஷ் குமார், திவ்யபாரதி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பேச்சிலர்’. இவர்களுடன் பல முன்னணி

Close