’ஆற்றல்’ – விமர்சனம்

நடிப்பு:  விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா, விக்கி, வித்யூ ராமன் மற்றும் பலர்

இயக்கம்: கே.எல்.கண்ணன்

தயாரிப்பு: ’செவ்வந்தி மூவிஸ்’ ஜே.மைக்கேல்

இசை: அஸ்வின் ஹேமந்த்

ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்

மக்கள் தொடர்பு: குணா

மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வர அவருக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இப்படியான நிலையில் வித்தார்த்தின் அப்பா சார்லி 10 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து எடுத்து வரும்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொன்று பணத்தை திருடி விடுகின்றனர்.

பிறகு வித்தார்த்துக்கு அப்பாவின் மரணம் குறித்த உண்மை எப்படி தெரிய வருகிறது? அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா, இல்லையா? கடைசியில் அவரது ஆட்டோமேட்டிக் கார் உருவாக்கும் கனவு நனவானதா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

0a1a

வழக்கம்போல விதார்த் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். சார்லி அப்பாவாக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் அழகான நடிப்பை கொடுக்க விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

அஸ்வின் ஹேமந்த் இசையும், கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

கே எல் கண்ணன் வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதை சிறப்பான முறையில் இயக்கியுள்ளார்.

’ஆற்றல்’ –  விதார்த் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்.