‘ஆறாம் திணை’யில் பேயை விரட்டி விரட்டி காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!

எம்ஆர்கேவிஎஸ் சினி மீடியா சார்பாக ஆர்.முத்துக்கிருஷ்ணன், எம்.வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் நான் கடவுள் ராஜேந்திரன், ரவி மரியா, லாவண்யா, விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் அருண்.சி கூறியதாவது:

மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய் சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய் படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம் பெறும் பிளாஷ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியத்துக்கான காரணத்தையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்துகொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

எப்போதும் பாசிட்டிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல, நடிகர் ரவி மரியாவுக்கும் இது பேர் சொல்லும் படமாக இருக்கும்.

நான் கடவுள் ராஜேந்திரனுடன் விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read previous post:
0a1a
“அரசியலின் ஆழம் தெரிந்ததால் தான் தயங்குகிறேன்”: ரஜினி ஓப்பன் டாக்!

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி, இன்று காலை  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில்

Close