தனுஷின் ‘வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஹீரோவின் 30 வருட வாழ்க்கை சொல்லப்படுகிறது.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், வருகிற (அக்டோபர்) 17ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் சில காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் தருவதாகக் கூறினர். ஆனால், படத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறனும், தனுஷூம் நீக்க மறுக்கவே, ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

Read previous post:
v5
தனுஷின் ‘வடசென்னை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம், வருகிற

Close