அமமுக முதல் பட்டியல்: 15 அதிகாரபூர்வ வேட்பாளர்கள் விவரம்

அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர்  டிடிவி தினகரன் இன்று (10-03-2021) வெளியிட்டார். அப்பட்டியல் வருமாறு:-

  1. ராசிபுரம் (தனி) – S.அன்பழகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமமுக துணைத் தலைவர்.
  2. பாப்பிரெட்டிப்பட்டி- P.பழனியப்பன், முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர்.
  3. பாபநாசம் – M.ரெங்கசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர்.
  4. சைதாப்பேட்டை- G.செந்தமிழன் முன்னாள் அமைச்சர், துணை பொதுச்செயலாளர் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர்.
  5. ஸ்ரீரங்கம் – R.மனோகரன் முன்னாள் அரசு கொறடா, பொருளாளர், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர்.
  6. மடத்துக்குளம் – C.சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், அமமுக தலைமை நிலையச் செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர்
  7. திருப்பத்தூர் (சிவகங்கை) – K.K. உமாதேவன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர்.
  8. சோளிங்கர் – N.G. பார்த்திபன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், தேர்தல் பிரிவுச் செயலாளர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்.
  9. வீரபாண்டி – வீரபாண்டி S.K. செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், சேலம் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்.
  10. உசிலம்பட்டி – I.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்
  11. கோவை தெற்கு – R.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை, முன்னாள் சட்டப்பேரவஒ உறுப்பினர், அமைப்புச் செயலாளர், கோவை மேற்கு மாவட்டச் செயலாளர்

12 அரூர் – அரூர் R.R.முருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அமைப்புச் செயலாளர், ஆட்சிமன்ற குழுத் தலைவர்.

13 பொள்ளாச்சி – K.சுகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர்.

14 தருமபுரி – D.K.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்.

15 புவனகிரி – K.S.K.பாலமுருகன், அமைப்புச் செயலாளர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்.