99 சாங்ஸ் – விமர்சனம்

நடிப்பு – எஹான் பாட், எட்ல்சி

ஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் ஆச்சாரி, டனே சதம்

இசை – ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம் – விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி

#

சின்ன வயதில் இருந்தே இசையை உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். இந்த காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. ‘‘நீ நூறு பாடல்களை இசையமைத்து கொண்டு வா… உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’’ என்கிறார்.

அவருடைய நிபந்தனையை நாயகன் ஏற்றுக்கொள்கிறான். நூறு பாடல்களை தேடி, அவன் தன் இசைப்பயணத்தை தொடங்குகிறான். மது பழக்கம் கூட இல்லாத அவனிடம், விளையாட்டாக போதை மருந்தை நண்பன் செலுத்துகிறான். அந்த போதையில் கார் ஓட்டிய நாயகன், விபத்துக்குள்ளாகிறான்.

போலீஸ் வருகிறது. சோதனையில், நாயகன் போதை மருந்து சாப்பிட்டது தெரியவர அவனை சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறார்கள். அதன்பிறகு நாயகன் என்ன ஆகிறான்? அவனுடைய காதல் ஜெயித்ததா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் எஹன் பாட் மிக அருமையான தேர்வு. கதாநாயகி எட்ல்சி, தன் அழகால் வசீகரிக்கிறார். மனிஷா கொய்ராலாவை தவிர முக்கிய கதாபாத்திரங்களில் அத்தனை பேரும் புதுமுகங்கள்.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு, முதல் பாதியில் இல்லாதது பின்னடைவு. ஒரே வரியில் சொல்லிவிடக் கூடிய எளிமையான கதை. ஏ.ஆர்.ரகுமானே எழுதியிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்ப திரைக்கதையை வளர்த்து இருப்பார்கள் போல தெரிகிறது. சில இடங்களில் வசனம் புரியவில்லை.

படத்தின் உண்மையான நாயகன் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், பாடல்களும் தான். வசீகர இசையால் மாயாஜாலம் செய்திருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் ஆச்சாரி மற்றும் டனே சதமின் ஒளிப்பதிவு வேற லெவல். ஹாலிவுட் பாணியில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில் ’99 சாங்ஸ்’ – இசை விருந்து!

 

Read previous post:
0a1g
”என் கணவருக்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி”: விவேக் மனைவி உருக்கம்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் விவேக் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க, தகனம்

Close