டெக்னாலஜி வளர்ச்சியால் ஏற்படும் கலாசார சீர்கேட்டை சொல்லும் ‘88’

ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘88’. இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார் மதன். மதன். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன்.

கதாநாயகியாக  உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர் ‘மிஸ் இண்டியா ஏசியா 2015’ல் பட்டம் வென்றவர். இவர்களுடன் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, மீரா கிருஷ்ணன், பவர் ஸ்டார், சாம்ஸ், அப்புகுட்டி, சாப்ளின் பாலு, சிசர் மனோகர், சேரன்ராஜ், பாய்ஸ் ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இதன் இயக்குனரும், கதாநாயகனுமான மதன் கூறுகையில், “இன்றைய டெக்னாலஜி  அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த அபார வளர்ச்சி, அபாய வளர்ச்சியாகவும் கருதப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த டெக்னாலஜி வளர்ச்சி எப்படி நமது கலாசார சீர்கேட்டை உருவாக்குகிறது. என்பது இந்த படத்தின் கதை.

“சில விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மறைத்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பகிரங்கப்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சனைகளையும் இதில் சொல்லியிருக்கிறோம். ஒரு நல்ல கருத்தை கமர்ஷியலாகக் கையாண்டுள்ளோம். படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு   –  வெற்றி

இசை   –  தயாரத்னம்

கலை  –  ஆரோக்கியராஜ்

பாடல்கள்  –  அறிவுமதி, மதன்கார்க்கி

நடனம்   –  காதல் கந்தாஸ்

ஸ்டண்ட்   –  சக்திசரவணன்

எடிட்டிங்   –  அவினாஷ் ஓட்டேரி

தயாரிப்பு மேற்பார்வை  –  ராம்பூபால்

ஊடகத் தொடர்பு – மௌனம்ரவி