தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 முனை போட்டி: களம் காணும் 160 முக்கிய வேட்பாளர்கள் இறுதி பட்டியல்!

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பிரதானமாக நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, ஐயுஎம்எல், கொமதேக ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணியில் உள்ள பாஜக 20 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், ஏ.சி.சண்முகம் கட்சி, பாரிவேந்தர் கட்சி, தேவநாதன் கட்சி, ஜான் பாண்டியன் கட்சி, ஓபிஎஸ் குழு ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

தொகுதிவாரியாக இந்த 4 முனை போட்டியில் களத்தில் நிற்கும் 160 வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வருமாறு:

திமுக போட்டியிடும் தொகுதிகள் (21):

1.வடசென்னை

i.டாக்டர் கலாநிதி வீராசாமி (திமுக)

ii.ராயபுரம் ஆர்.மனோ (அதிமுக)

iii.ஆர்.சி.பால் கனகராஜ் (பாஜக)

iv.டாக்டர் அமுதினி (நாதக)

2.தென்சென்னை

i.சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)

ii.டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)

iii.டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் (பாஜக)

iv.முனைவர் சு.தமிழ்செல்வி (நாதக)

3.மத்திய சென்னை

i.தயாநிதி மாறன் (திமுக)

ii.ப.பார்த்தசாரதி (தேமுதிக)

iii.வினோஜ் பி.செல்வம் (பாஜக)

iv.முனைவர் இரா.கார்த்திகேயன் (நாதக)

4.ஸ்ரீபெரும்புதூர்

i.டி.ஆர்.பாலு (திமுக)

ii.டாக்டர் ஜி.பிரேம்குமார் (அதிமுக)

iii.வி.என்.வேணுகோபால் (தமாகா)

iv.டாக்டர் வெ.ரவிச்சந்திரன் (நாதக)

5.காஞ்சிபுரம் (தனி)

i.க.செல்வம் (திமுக)

ii.ஈ.ராஜசேகர் (அதிமுக)

iii.வெ.ஜோதி வெங்கடேசன் (பாமக)

iv.வி.சந்தோஷ்குமார் (நாதக)

6.அரக்கோணம்

i.எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக)

ii.ஏ.எல்.விஜயன் (அதிமுக)

iii.வழக்கறிஞர் கே.பாலு (பாமக)

iv.பேராசிரியர்அப்சியா நஸ்ரின் (நாதக)

7.வேலூர்

i.டி.எம்.கதிர் ஆனந்த் (திமுக)

ii.டாக்டர் எஸ்.பசுபதி (அதிமுக)

iii.ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி – தாமரை)

iv.மகேஷ்குமார் (நாதக)

8.திருவண்ணாமலை

i.சி.என்.அண்ணாதுரை (திமுக)

ii.எம்.கலியபெருமாள் (அதிமுக)

iii.ஏ.அஸ்வத்தாமன் (பாஜக)

iv.டாக்டர் ரா.ரமேஷ்பாபு (நாதக)

9.ஆரணி

i.எம்.எஸ்.தரணிவேந்தன் (திமுக)

ii.ஜி.வி.கஜேந்திரன் (அதிமுக)

iii.முனைவர் அ.கணேஷ் குமார் (பாமக)

iv.டாக்டர் கு.பாக்கியலட்சுமி (நாதக)

10.கள்ளக்குறிச்சி

i.தே.மலையரசன் (திமுக)

ii.இரா.குமரகுரு (அதிமுக)

iii.இரா.தேவதாஸ் உடையார் (பாமக)

iv.ஆ.ஜெகதீசன் (நாதக)

11.பெரம்பலூர்

i.அருண் நேரு (திமுக)

ii.என்.டி.சந்திரமோகன் (அதிமுக)

iii.பாரிவேந்தர் (ஐ.ஜே.கே – தாமரை)

iv.இரா.தேன்மொழி (நாதக)

12.தஞ்சாவூர்

i.ச.முரசொலி (திமுக)

ii.பி.சிவநேசன் (தேமுதிக)

iii.எம்.முருகானந்தம் (பாஜக)

iv.ஹூமாயூன் கபீர் (நாதக)

13.தருமபுரி

i.ஆ.மணி (திமுக)

ii.டாக்டர் ஆர்.அசோகன் (அதிமுக)

iii.சவுமியா அன்புமணி (பாமக)

iv.டாக்டர் கா.அபிநயா பொன்னிவளவன் (நாதக)

14.சேலம்

i.டி.எம்.செல்வகணபதி (திமுக)

ii.விக்னேஷ் (அதிமுக)

iii.ந.அண்ணாதுரை (பாமக)

iv.டாக்டர் க.மனோஜ்குமார் (நாதக)

15.ஈரோடு

i.கே.இ.பிரகாஷ் (திமுக)

ii.ஆற்றல் அசோக்குமார் (அதிமுக)

iii.பி.விஜயகுமார் (தமாகா)

iv.டாக்டர் மு.கார்மேகன் (நாதக)

16.கோவை

i.கணபதி ப.ராஜ்குமார் (திமுக)

ii.சிங்கை ஜி.ராமச்சந்திரன் (அதிமுக)

iii.கே.அண்ணாமலை (பாஜக)

iv.மா.கலாமணி ஜெகநாதன் (நாதக)

17.நீலகிரி (தனி)

i.ஆ.ராசா (திமுக)

ii.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)

iii.எல்.முருகன் (பாஜக)

iv.ஆ.ஜெயகுமார் (நாதக)

18.பொள்ளாச்சி

i.கே.ஈஸ்வரசாமி (திமுக)

ii.கார்த்திக் அப்புசாமி என்ற ஏ.கார்த்திகேயன் (அதிமுக)

iii.கே.வசந்தராஜன் (பாஜக)

iv.டாக்டர் நா.சுரேஷ்குமார் (நாதக)

19.தென்காசி (தனி)

i.டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (திமுக)

ii.டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்- இரட்டை இலை)

iii.ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – தாமரை)

iv.ச.சி.இசை மதிவாணன் (நாதக)

20.தூத்துக்குடி

i.கனிமொழி கருணாநிதி (திமுக)

ii.ஆர்.சிவசாமி வேலுமணி (அதிமுக)

iii.எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா)

iv.டாக்டர் ரொவினா ரூத் ஜேன் (நாதக)

21.தேனி

i.தங்க தமிழ்செல்வன் (திமுக)

ii.வி.டி.நாராயணசாமி (அதிமுக)

iii.டிடிவி.தினகரன் (அமமுக)

iv.டாக்டர் மதன் ஜெயபாலன் (நாதக)

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் (10):

1.திருவள்ளூர் (தனி)

i.சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்)

ii.கு.நல்லதம்பி (தேமுதிக)

iii.பொன்.வி.பாலகணபதி (பாஜக)

iv.மு.ஜெகதீஷ் சந்தர் (நாதக)

2.கடலூர்

i.எம்.கே.விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)

ii.பி.சிவகொழுந்து (தேமுதிக)

iii.தங்கர்பச்சான் (பாமக)

iv.வெ.மணிவாசகன் (நாதக)

3.மயிலாடுதுறை

i.வழக்கறிஞர் ஆர்.சுதா (காங்கிரஸ்)

ii.பி.பாபு (அதிமுக)

iii.ம.க.ஸ்டாலின் (பாமக)

iv.பி.காளியம்மாள் (நாதக)

4.சிவகங்கை

i.கார்த்திக் சிதம்பரம் (காங்கிரஸ்)

ii.பனங்குடி ஏ.சேவியர் தாஸ் (அதிமுக)

iii.தேவநாதன் யாதவ் (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்-தாமரை)

iv.வி.எழிலரசி (நாதக)

5.கிருஷ்ணகிரி

i.கே.கோபிநாத் (காங்கிரஸ்)

ii.வி.ஜெயபிரகாஷ் (அதிமுக)

iii.சி.நரசிம்மன் (பாஜக)

iv.வித்யா ராணி வீரப்பன் (நாதக)

6.கரூர்

i.ஜோதிமணி (காங்கிரஸ்)

ii.கே.ஆர்.எல்.தங்கவேல் (அதிமுக)

iii.வி.வி.செந்தில்நாதன் (பாஜக)

iv.டாக்டர் ரெ.கருப்பையா ( நாதக)

7.விருதுநகர்

i.மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)

ii.வி.விஜய பிரபாகரன் (தேமுதிக)

iii.ராதிகா சரத்குமார் (பாஜக)

iv.டாக்டர் சி.கௌசிக் (நாதக)

8.கன்னியாகுமரி

i.விஜய் வசந்த் (காங்கிரஸ்)

ii.பலிசியான் நசரேத் (அதிமுக)

iii.பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)

iv.மரிய ஜெனிபர் (நாதக)

9.திருநெல்வேலி

i.ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்)

ii.எம்,ஜான்சி ராணி (அதிமுக)

iii.நயினார் நாகேந்திரன் (பாஜக)

iv.பா.சத்யா ( நாதக)

10.புதுச்சேரி

i.வி.வைத்திலிங்கம் (காங்கிரஸ்)

ii.ஜி.தமிழ்வேந்தன் (அதிமுக)

iii.ஏ.நமச்சிவாயம் (பாஜக)

iv.டாக்டர் ரா.மேனகா ( நாதக)

சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் (2):

1.மதுரை

i.சு.வெங்கடேசன் (சிபிஐஎம்)

ii.டாக்டர் பி.சரவணன் (அதிமுக)

iii.ராம சீனிவாசன் (பாஜக)

iv.முனைவர் மோ.சத்யாதேவி (நாதக)

2.திண்டுக்கல்

i.சச்சிதானந்தம் (சிபிஐஎம்)

ii.நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ)

iii.கவிஞர் ம.திலகபாமா (பாமக)

iv.டாக்டர் கயிலை ராஜன் துரைராஜன் ( நாதக)

சிபிஐ போட்டியிடும் தொகுதிகள் (2):

1.நாகபட்டினம் (தனி)

i.வை.செல்வராஜ் (சிபிஐ)

ii.ஜி.சுர்சித் சங்கர் (அதிமுக)

iii.எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக)

iv.மு.கார்த்திகா (நாதக)

2.திருப்பூர்

i.சுப்பராயன் (சிபிஐ)

ii.பி.அருணாச்சலம் (அதிமுக)

iii.ஏ.பி.முருகானந்தம் (பாஜக)

iv.கி.மா.சீதாலட்சுமி (நாதக)

விசிக போட்டியிடும் தொகுதிகள் (2):

1.சிதம்பரம் (தனி)

i.தொல்.திருமாவளவன் (விசிக)

ii.எம்.சந்திரகாந்தன் (அதிமுக)

iii.பி.கார்த்தியாயினி (பாஜக)

iv.ஜான்சி ராணி (நாதக)

2.விழுப்புரம் (தனி)

i.ரவிக்குமார் (விசிக)

ii.ஜெ.பாக்யராஜ் (அதிமுக)

iii.முரளி சங்கர் (பாமக)

iv.இயக்குநர் மு.களஞ்சியம் (நாதக)

மதிமுக போட்டியிடும் தொகுதி (1):

1.திருச்சி

i.துரை வைகோ (மதிமுக)

ii.பி.கருப்பையா (அதிமுக)

iii.பி.செந்தில்நாதன் (அமமுக)

iv.ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாதக)

ஐயுஎம்எல் போட்டியிடும் தொகுதி (1):

1.ராமநாதபுரம்

i.நவாஸ் கனி (ஐயுஎம்எல் – ஏணி)

ii.பா.ஜெயபெருமாள் (அதிமுக)

iii.ஓ.பன்னீர்செல்வம் (சுயேச்சை-பலாப்பழம்)

iv.டாக்டர் சந்திரபிரபா ஜெயபால் (நாதக)

கொமதேக போட்டியிடும் தொகுதி (1):

1.நாமக்கல்

i.மாதேஸ்வரன் (கொமதேக – உதயசூரியன்)

ii.எஸ்.தமிழ்மணி (அதிமுக)

iii.கே.பி.ராமலிங்கம் (பாஜக)

iv.க.கனிமொழி (நாதக)

                  # # # # #

விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்

i.தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்)

ii.ராணி (அதிமுக)

iii.வி.எஸ்.நந்தினி (பாஜக)

iv.இரா.ஜெமினி (நாதக)