சவுக்கு சங்கரின் கைதை வரவேற்கலாம்; ஆனால் அவரின் காயத்தை ரசிக்க முடியாது!

சவுக்கு சங்கரின் கைதை வரவேற்கலாம்; ஆனால் அவரின் காயத்தை ரசிக்க முடியாது, ரசிக்கக் கூடாது.

ஒரு நவீனமடைந்த மனிதனாக நம்பும் நாம் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிக்ககூடாது. சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசிடம் நாம் கண்டிப்பு காட்ட வேண்டும்.

ஜனநாயகத்தை, மனித உரிமைகளை பேசும் நாம் அதிலிருந்து ஒருதலைப் பட்சமாக கீழே இறங்கினால், நாளை வேறு ஒரு சூழலில் நம் குரலை மக்கள் நம்ப மாட்டார்கள்.

சவுக்கின் குற்ற செயல்களுக்கு எத்தனை வழக்கு வேண்டுமானாலும் பதியுங்கள், தண்டனை வாங்கி கொடுங்கள். ஆனால் எல்லாம் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு., என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

நாம் ஆதரிக்கும் அரசாக இருந்தாலும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் காவல்துறை போன்ற அரசு இயந்திரங்களிடம் டேக்கன் அஸ் கிராண்டெட் ஆக எந்த கேள்வியில்லாமல் அதிகாரத்தை கையளித்து விட கூடாது.

-ANBE SELVA