சென்னை பட விழாவில் “அம்மா” துதி! ஆடியன்ஸ் கிண்டல்!

13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழா சென்னையில் புதனன்று மாலை இந்த விழாவில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பேசும்போது, “அம்மாக்கு நன்றி”, “மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு முதல் நன்றி” என்று கூறும்போதெல்லாம் ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேலியும் கிண்டலுமாக ஒரே கூச்சல் கூப்பாடு. அவர்கள் பேசி முடிக்கும்போதுகூட “அம்மாக்காக காத்துருக்கோம்”, “மம்மிக்கு நன்றி சொல்ல மறந்துட்டீங்க” என்று கூவி கூவி கிண்டல்கள் பறந்தன.

இதை வெறும் தியேட்டர் இருட்டிலிருந்து இருந்து வந்த வழக்கமான கிண்டலாக பார்க்க முடியாது. இத்தனைக்கும் வந்திருந்த அத்தனை பேரும் அங்கே ரசனையான கலாப்பூர்வமான படங்களை காண வந்திருந்த ரசிகர்கள் தான்.

ஒரு வருடத்திற்கு முன்பு தியேட்டர்களில் ‘நான்காண்டு ஆட்சி’ விளம்பரங்கள் வரும்போதுகூட சிறிய கமெண்ட்டுகள்தான் கேட்கும். ஆனால் இது போன்ற ஒரு வெளிப்படையான எதிர்வினையை எவரும் பார்த்ததில்லை.

நிச்சயம் இது வெள்ளத்திற்கு பிறகான மனநிலைதான். இது ஒருவருக்கு எதிரான கோபம் இல்லை. முறைகேடான, செயல்படாத, வெற்று அலங்காரங்களால் பின்னப்பட்டிருக்கும் அரசு செயல்பாடுகளுக்கு எதிரான மொத்த கோபம்தான்.

நாளை எந்த கட்சி ஆட்சிக்கு வந்து செயல்படாவிட்டாலும் இந்த நிலை வரும் என்று தோன்றுகிறது.