பாலாஜி தரணிதரன் இயக்கும் ‘சீதக்காதி’ விஜய் சேதுபதியின் 25-வது படம்!

குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் பெற்றுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25-வது படம் ‘சீதக்காதி’. இந்த படத்தை இயக்குபவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன். விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் ‘சீதக்காதி’.
Passion studios  என்ற பட நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் ‘சீதக்காதி’ கதையமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.
“சீதக்காதி’ படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி , இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்கப் போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் ‘சீதக்காதி’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
0a1g
Read previous post:
b11
Inauguration of Bharathi Raaja International Institute of Cinema

Inauguration of Briic - Bharathi Raaja International Institute of Cinema

Close