பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் அமோக வெற்றி பெற்றுள்ளதால், ‘கபாலி-2’ எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்திற்கு முன்னரே இயக்குனர் பா.ரஞ்சித் நடிகர் சூர்யாவை வைத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்வதாக இருந்தது. ‘கபாலி’ படத்திற்குப் பின், மீண்டும் சூர்யா படத்தை தொடங்க இருந்தார் பா.ரஞ்சித்

இதற்கிடையில், விஜய்க்கு கதை சொல்ல வருமாறு பா.ரஞ்சித் அன்புடன் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் போய் விஜயிடம் கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போனதால், பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிப்பது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்க இருக்கிறார் பா.ரஞ்சித். தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் படத்தை அவர் தயாரிக்க இருக்கிறார் .அந்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க இருக்கிறார்.

ஆக, கபாலி-2, சூர்யா படம், விஜய் படம், சொந்தமாக தயாரிக்கும் படம் என தொடர் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்