அட்லீ இயக்கும் விஜய் படத்தின் டைட்டில் ‘மெர்சல்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துவரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

0aஇராம.நாராயணன் ஆசியுடன்  தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100-வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சென்னையில் பிரமாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய  காட்சிகள்  படமாக்கப்பட்டன. இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில்  படமாக்கப்பட்டு உள்ளது.

விஜய் ரசிகர்களால் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ‘மெர்சல்’ ஃபர்ஸ்ட்லுக் (முதல் பார்வை) இன்று (21.6.17) மாலை 6 மணிக்கு  படத்தின்  தலைப்போடு வெளியிடப்பட்டது.

இதன் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடத்த  ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள்  எழுத, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல் அரசு சண்டை பயிற்சியையும், விஜயேந்திர பிரசாத் மற்றும் ரமணகிரி வாசன் இருவரும் திரைக்கதையையும்,  ஷோபி நடன பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி தயாரிக்கிறார்கள்.

இப்படத்தை அட்லீ கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

 

Read previous post:
0
“Yoga is a form of exercise and not part of any religion”: Kerala CM on International Yoga Day

"Yoga is a form of exercise that helps in keeping several diseases at bay. It does not belong to any

Close