”உரிமைக்கான போராட்டம் கண்டு அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்”: ரஜினிக்கு உதயநிதி பதிலடி!

இந்திய ஒன்றிய சங்கியரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி கருத்து தெரிவிக்காமல், அதை எதிர்த்துப் போராடுவோருக்கு அறிவுரை கூறி கருத்து தெரிவித்துள்ளார் கொடூர வலதுசாரி கருத்தியலாளரும், கர்நாடக மராட்டியருமான நடிகர் ரஜினி.

”எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒருவழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று கூறியுள்ளார் ரஜினி.

ரஜினியின் இந்த அபத்தமான நிலைப்பாட்டை கிண்டலடித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட் வருமாறு:

“தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை சட்ட்த் திருத்த எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்ட்த்தை ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வருவோம்.”