சசிகலா தலைமையில் டிடிவி.தினகரன் மகள் திருமணம்: நடிகர் பிரபு நேரில் வாழ்த்து!

0a1sஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (16-09-2021) காலை திருமணம் நடைபெற்றது.

இன்று காலை 7.45 மணிக்கு மணமேடைக்கு வந்தார் மணமகன். அவரைத் தொடர்ந்து மண்டபத்திற்கு வந்த சசிகலாவும், இளவரசியும் மேடையின் தனி இருக்கைகளில் அமர்ந்தனர்.

வேலூர் பொற்கோவில் தலைவர் ரமணியம்மா தாலியை ஆசீர்வதித்து எடுத்துக்கொடுக்க, சசிகலா முன்னிலையில் 9.25 மணிக்கு திருமணம் நடைபெற்றது.

சுதாகரன் – சந்தானலட்சுமி திருமணவழி உறவினர்கள் என்ற வகையில் நடிகர் பிரபுவும், அவரது சகோதரர் ராம்குமாரும் நேரில் வந்து மணமக்கள் ஜெயஹரிணி – ராமநாதன் துளசி வாண்டையாரை வாழ்த்தினார்கள்.

0a1r

 

 

0a1q

Read previous post:
0a1q
ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில்

Close