மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: பெயர்கள் மற்றும் துறைகள் விவரம்

நாளை முதல்வராகப் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும் பொறுப்பேற்க உள்ளனர்.

புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களது துறை விவரம் வருமாறு

  1. ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)
    2.துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்
    3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
    4. பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்
    5. பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்
    6. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்
    7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை அமைச்சர்
    8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
    9. தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர்
    10. எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
    11. முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர்
    12. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
    13. தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்
    14. சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்
    15. கீதாஜீவன் – சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
    16. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
    17. ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
    18. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்
    19. சக்ரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
    20. செந்தில் பாலாஜி = மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
    21. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
    22. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
    23. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
    24. எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
    25. பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை
    26. ஆவடி நாசர் – பால்வளத்துறை அமைச்சர்
    27. செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
  2. 8அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
    29. மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
    30. சிவி கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
    31. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
    32. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
    33. கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
    34. சேகர் பாபு – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

 

Read previous post:
0a1a
பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்: தலைவர்கள் இரங்கல்

பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 88. சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் ஏப்ரல் 19ஆம்

Close