பார்வைக்கு வராத அவசர சட்டத்தை மக்கள் எப்படி ஏற்பார்கள்?

ஓர் அரசாங்கம் மக்களை மிரட்டுகிறது. ஆனால், பீட்டாவிற்கு பயந்து நடுங்குகிறது.

இன்றைய அவசரச் சட்டம் என்ன என்பதை இப்போது வரை மக்கள் மத்தியில் வெளியிடவில்லை. மக்களின் கண்களுக்கு வராத சட்டத்தை எப்படி மக்கள் ஏற்பார்கள்?

இதற்கு அளிக்கப்படும் பதில் அதிர்ச்சிகரமானது. “அவசர சட்டத்தை வெளியிட்டால், இரவோடு இரவாக பீட்டா நீதிபதியின் இல்லம் சென்று தடை பெற்றுவிடும். நாளை வாடிவாசல் திறக்க இயலாது…!”

தொடை நடுங்கி அரசாங்கம்…

இனியும் “அரசாங்கம் vs பீட்டா” என்று சட்ட நாடகம் நடப்பதை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு தமிழனும் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொண்டு தானே வாதாடுவான்.

தமிழக வழக்கறிஞர் சமுதாயம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் என்பதை அரசாங்கம், பீட்டா, நீதிமன்றம் தெரிந்து கொள்ளட்டும்.

10 லட்சம் மக்கள் தானே வாதாட மனு போடுவார்கள். இனியும் பொதுநல வழக்கு என்ற பாவ்லா எடுபடாது…

KANNIAPPAN ELANGOVAN

 

 

Read previous post:
0a1
மக்களின் எதிர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி: அலங்காநல்லூரில் பதட்டம்!

தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு இன்று மாலை பிறப்பித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டை அலங்காநல்லூரில்

Close