“அதிமேதாவி” பானு கோம்ஸ் எந்த சமூகத்துக்கான ஆர்வலர்?

சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் அதிமேதாவித்தனமாக தனது வாதங்களை வைக்கிறார்.

அரசியல் கட்சிகள் எதுவுமே சரியில்லை என்கிறார்.

இன்று கத்திரிக்காய் சமைக்கலாம் என்று கடைக்குப் போகிறோம்.
ஒரு கடையிலும் நாம் நினைத்த மாதிரி கத்திரிக்காய் இல்லையென்றால், இருப்பதில் எது நல்லது என்று பார்த்து வாங்குவதில்லையா?

அதைப்போல இன்று இருப்பதில் எது நல்ல கட்சி என்று பார்க்க வேண்டாமா?

இன்று இருப்பதில் இடதுசாரிகள் நல்லவர்கள் என்பதை உணர வேண்டாமா?

இடதுசாரி கொள்கை தான் மக்களுக்கு இன்று தேவையானது என்பதை உணர வேண்டாமா?

சில நேரங்களில் கம்யூனிஸ்ட்களும் பிஜேபியும் ஒன்றுதான் என்பதுபோல் பேசுகிறார்.

ஒப்பிடும்போது குதிரையை குதிரையோடும், கழுதையை கழுதையோடும் தான் ஒப்பிட வேண்டும். குதிரையை கழுதையோடு ஒப்பிடக் கூடாது.

கம்யூனிஸ்ட் வட துருவம் என்றால், பிஜேபி தென் துருவம்.

கம்யூனிஸ்ட் அடித்தட்டு மக்களின் நலனுக்கானது. பிஜேபி மேல்தட்டு மக்களின் நலனுக்கானது.

ஆகவே, இவர் எந்த சமூகத்திற்கான ஆர்வலர் என்பது புரியவில்லை?!

Kolandaisamy

Read previous post:
0a1m
திரைப்பட தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்ய கோரி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்!

“புதிய திரைப்படங்களின் தலைப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்” என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு

Close