“கௌதமி, சுப்புலட்சுமி எனக்கு முக்கியம் இல்லை”: ஸ்ருதிஹாசன் சூசகம்!

தன்னுடைய பெற்றோர் (கமல்ஹாசன், சரிகா), சகோதரி (அக்ஷ்யா) ஆகியோர் மட்டும் தான் தனக்கு முக்கியம் என கூறியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், கௌதமியோ, அவரது மகள் சுப்புலட்சுமியோ தனக்கு முக்கியமில்லை என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதராக நடிகர் கமல்ஹாசனுடன் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, தற்போது கமலை பிரிந்துவிட்டதாகவும், இது தன் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு என்றும் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

கமல் – கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம், கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் என்று தமிழ் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது உண்மைதான் என நிரூபிப்பது போல் ஸ்ருதிஹாசன் தனது செய்தி தொடர்பாளர் மூலம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கௌதமியின் பெயரை குறிப்பிடக்கூட விருப்பமில்லாத ஸ்ருதிஹாசன், ‘யாருடைய’ வாழ்க்கையை பற்றியும், ‘அவர்களுடைய’ முடிவுகளை பற்றியும் தான் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், தன்னை பொறுத்த வரை, தன்னுடைய பெற்றோர் (கமல்ஹாசன், சரிகா), சகோதரி (அக்ஷ்யா) என தன்னுடைய குடும்பத்தின் மேல் தான் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம் என கூறியுள்ள ஸ்ருதிஹாசன், கௌதமியோ, அவரது மகள் சுப்புலட்சுமியோ தனக்கு முக்கியமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அந்த செய்திக்குறிப்பு வருமாறு:

“ஸ்ருதிஹாசனுடைய  செய்தி தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ அறிக்கை:- யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரை பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்.”