டயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த வியாழன் இரவு நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர், “சார்.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?” ன்று கேட்டார். அதற்கு அமைச்சர் முறையாக பதிலளிக்காமல், “உங்களுக்கு ஸ்பெக்ஸ் ரொம்ப அழகாயிருக்கு மேடம்” என்றார்.

தனது ஊடக நெறியிலிருந்து சற்றும் விலகாத அந்த பெண் நிருபர், “சார்.. நான் எப்போதுமே ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டுத் தான் இருக்கேன்” என பதில் சொல்ல, “அப்ப இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க” என மீண்டும் அமைச்சர் கலாய்த்தார்.

சற்றும் தளராத அந்த நிருபர், “கூட்டத்தில் என்ன தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன?” என மீண்டும் கேட்டார். அதற்கு, “பிரஸ் ரிலீஸ் கொடுப்பாங்க மேடம்.. சீனியர் லீடர்ஸ் பேசுவாங்க” என்று சொல்லிக்கொண்டே நகர, அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த நிருபர் “நீங்கள் உள்ளே இருந்தீர்கள் அல்லவா, என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன?” எனக் கேட்க, அமைச்சர் திரும்பி நின்று,.. “அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க.. அழகா இருக்கீங்க…” என மூன்று முறை கூறிவிட்டுச் சென்றார்.

அமைச்சரின் இந்த பொறுப்பற்ற, அநாகரிகமான பதிலுக்கு செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பலர் அமைச்சரை கடுமையாக கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “அரசியல் கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன்” என்று கூறியுள்ளார்.

நல்லது மக்களே…! முன்பு ஜெயலலிதாவின் கார் டயரையும், இப்போது மோடியின் கார் டயரையும் நக்கிப் பிழைக்கும் டயர் நக்கிகள் நாளை ஓட்டுக் கேட்டு உங்களிடம் வந்தால், “உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம்” என நேரடியாக சொல்வதை தவிர்த்துவிட்டு, “நீங்க அழகா இருக்கீங்க… அழகா இருக்கீங்க… அழகா இருக்கீங்க…” என்று கூட்டமாய் சேர்ந்து உரக்க கூவுங்கள்! உங்களின் இந்த முழக்கம் செருப்படிக்கு சமமாக இருக்கும்!

 

Read previous post:
0a1c
“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” – எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் - கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப்

Close