நடிகர் ரமேஷ் திலக் திருமணம்: நவலட்சுமியை மணந்தார்!

‘சூது கவ்வும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவரும், திலகநாதன் – சபிதா தம்பதியரின் மகனுமான ரமேஷ் திலக்குக்கும், சூரியன் எஃப்எம் ரேடியோ ஜாக்கியும், ராம்போ ராஜ்குமார் – கற்பகம் தம்பதியினரின் மகளுமான நவலட்சுமிக்கும் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை திருமணம் நடந்தது.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில்  நடைபெற்ற இத்திருமணத்தில் இருவரது வீட்டாரும், உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Read previous post:
0a1c
“பிடர் கொண்ட சிங்கமே, நீ பேசுவாய் வாய் திறந்து”: கலைஞருக்காக வைரமுத்து கவிதை!

"பிடர்கொண்ட சிங்கமே பேசு!" - வைரமுத்து

Close