தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்

தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்துவந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாடு ஆளுநராக மேகாலயா ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

புதிய ஆளுநரின் பதவியேற்பு  நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஆளுநர் மாளிகையில் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

Read previous post:
0a1c
சூர்யா தயாரித்துள்ள ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் முதல் பாடல்  ‘சீரா சீரா’ – வீடியோ

சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் 'சீரா சீரா' எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO

Close