ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் ரூ.12.50 கோடி வாங்கியது அம்பலம்!

‘ஆரூத்ரா கோல்டு’ நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆசியம்மாள் நேற்று தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

‘ஆரூத்ரா கோல்டு’ நிதி நிறுவன வழக்கில் கைதான ரூஷோ என்பவர் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.12.50 கோடி கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் வரவில்லை. அவர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Read previous post:
0a1a
”350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது”: ‘தலைநகரம் 2’ படக்குழு  நன்றி!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில்,  மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான

Close