டீசருக்கு அமோக வரவேற்பு: ஜனவரியில் வெளியாகிறது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

நேற்று வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வித்தியாசமான டீசர், தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதை, அது சொல்லப்படும்  விதம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை இந்த டீசரில் ரசிகர்கள் அடையாளம் காண முடிந்ததே இந்த பெரிய வரவேற்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.

தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் ‘கிளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ நிறுவனம், ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தமிழக  திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

ஒரு ரசிகனின் பாராட்டு ‘கிளாப்’ (கைதட்டல்) மூலமே வெளிப்படும். அந்த ‘கிளாப்’, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

7C’S Entertainment Private Ltd மற்றும் ‘அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வருகிற (2018ஆம் ஆண்டு) ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ், கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுககுமாரின் திறன் இப்படத்தை சிறப்பாக்கி உள்ளது எனக் கூறப்படுகிறது.

”எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது. 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தோடு இனிதே தொடங்கலாம். இப்படம் நிறைய பேரின் நல்லாசிகளைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.

 

Read previous post:
o1
Oru Nalla Naal Paathu Sollren Movie Stills

Oru Nalla Naal Paathu Sollren Movie Stills

Close