ஜெ. மரண சர்ச்சை குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதாக கௌதமி சொன்னது பொய்!

டிசம்பர் 9 ஆம் தேதி நடிகை கௌதமி அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரண்த்தில் நிலவும் மர்மங்கள் குறித்து கேள்வியெழுப்பி கடிதம் எழுதியதாக தனது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார். ஊடகங்களும் அதனை செய்தியாக வெளியிட்டன. கடித நகலும் கொடுக்கப்பட்டது.

உண்மையில் கடிதம் அனுப்பபட்டதா என்று தெரிந்துகொள்ள, 12.12.2016 ஆம் தேதி, பிரதமர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், பிரதமர் அலுவலகத்திற்கு நடிகை கௌதமி அவர்கள் அனுப்பிய கடித நகல் கோரி மனு செய்யப்பட்டது.

இதற்கு 27.1.2017 தேதியிட்ட கடிதம் மூலம் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று பதிலளித்துள்ளனர் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.

0a

இதன் மூலம் கௌதமி கூறியது பொய் என்று தெரிகிறது.

தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பினாரா? அல்லது வெட்டி விளம்பரத்திற்கு செய்தாரா? என்பது அவரவர் பார்வைக்கு.

பிரதமருக்கு கடிதம் எழுதினேன், கடிதம் எழுதினேன் என்று தம்பட்டம் அடிக்கும் க்ரூப் எல்லாம் இப்படி தானோ?

எந்த நாட்டு பிரதமருக்கு அனுப்பினாங்கனு ஊடகக்காரங்க கொஞ்சம் கேட்டு சொல்லங்கப்பா…!

DEEPAK P B

# # #

ஜெயலலிதா மரண சர்ச்சை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக நடிகை கௌதமி சொல்லியிருந்தார்..

ஆனால் அப்படியொரு கடிதமே வரவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம் நம்ம நண்பர் Deepak P Bக்கு சொல்லியிருக்கு..

உட்டாலக்கடி ஆயா.. வுழுந்து எழுந்து வாய்யா..

EZHUMALAI VENKATESAN

# # #

கௌதமி சப்பைக்கட்டு:

கௌதமியின் பொய் அம்பலமானதை தொடர்ந்து, அவரை சமூக வலைத்தள பதிவர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் கௌதமி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து நான் டிசம்பர் 8ஆம் தேதி என்னுடைய சமூக வலைத்தளத்தில் ‘பிரதமர் மோடி அவர்களின் கவனத்துக்கு’ என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதினேன். அதன் நகலை பிரதமரின் ட்விட்டர் பக்கத்துக்கு அனுப்பினேன். அந்த கடிதம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தியாக வந்தும், அது பிரதமரின் பார்வைக்கு செல்லாமல் தப்பித்துள்ளது” என்கிற ரீதியில் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார் கௌதமி.