“தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி”: அர்னாப் டிவி செய்தி!

“பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்க இருக்கிறது” என்று ஆரியத்துவவாதியும், போர் வெறியனும், கேவலமான ஊடகவியலாளனுமான அர்னாப் கோஸ்வாமியின் ‘ரிபப்ளிக் டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:

“பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்க இருக்கிறது. இதற்காக அதிமுக.வின் இரு அணிகளும் இணைக்கப்பட இருக்கிறது. மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவுக்கு மூன்று அமைச்சர் பதவிகளைக் கொடுக்க பா.ஜ.க. முன்வந்திருக்கிறது. (BJP is all set to have an NDA Government in Tamil Nadu. They are on the verge of merging both factions of AIADMK. Three ministerial berths have been offered to AIADMK in the Cabinet reshuffle in the Centre: Sources)”

பாஜக.வுக்கு நெருக்கமான, பாஜக தலைவர்களின் முதலீட்டில் நடத்தப்படுகிற, பாஜக.வின் ஊதுகுழலான ‘ரிபப்ளிக் டிவி’யில் வெளியாகியிருப்பதால், இது பாஜகவின் அதிகாரபூர்வ செய்தியாகவே பார்க்கப்படுகிறது.