சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி நடிக்கும் ‘நாடோடிகள் 2’: படப்பிடிப்பு துவங்கியது!

2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில்    ‘நாடோடிகள் 2’ உருவாகுகிறது.

சசிகுமாருடன் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (26ஆம் தேதி) பூஜையுடன் துவங்கியது.

0a1c

இந்த படத்தின் படப்பிடிப்பை மதுரை சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஏகாம்பரம்

கலை – ஜாக்கி

எடிட்டிங் –  ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி –  திலீப் சுப்புராயன்

நடனம் – திணேஷ், ஜானி

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி

 

Read previous post:
y6
Yemaali Movie Stills

Yemaali Movie Stills

Close