“திராவிடம் என்பது தமிழகம் மட்டும் அல்ல; அது நாடு தழுவியது”: கமல் பேச்சு!

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பத்திரிகையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இதோடு முடிந்தது திராவிடம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ‘ஜனகணமன’’ பாடலில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரையிலும் திராவிடம் இருக்கும்” என்றார் கமல்.

மேலும், “திராவிடம் என்பது தமிழகம் மற்றும் தென்னகத்தோடு நின்றுவிட்டது என்று நினைக்கிறார்கள். நாடு தழுவியது இந்த திராவிடம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து மெதுவாக தள்ளிக்கொள்ளப்பட்டு வந்து, கடைசியில் டிக்காஷனாக இங்கே நிற்கிறது. திராவிடம் என்பது Pan Indian Movement. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரங்கம் மட்டும் அல்ல, நாடும் நினைவில் வைத்துக்கொள்ளட்டும். நான் சொல்லுவது ஓட்டின் எண்ணிக்கை அல்ல, அது மக்கள் சக்தி” என்றும் கமல் கூறினார்.

கமல் பேச்சு – வீடியோ: