ஒரே நாளில் 60 லட்சம் பார்வைகள் : ‘மட்டி’  ட்ரெய்லரில் ஒரு சாதனை

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்டமான முறையில் ஆறு மொழிகளில் உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம் . இந்தப்படம் டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீஸர் வெளியாகி இப்போது 16 மில்லியன் பேர் அதைப் பார்த்து ஒரு சாதனை படைத்தது. அதேபோல் நேற்று ட்ரெய்லர் வெளியானபோது மீண்டும் ஒரு சாதனை படைத்தது .வெளியிட்ட அன்று ஒரே நாளில் ஆறு மில்லியன் பேர் ட்ரெய்லரைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர் .இது தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்.

இந்தியாவின் முதன்முதலாக மண்சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.  பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது.குடும்பம், பகை,  பழிவாங்கல் ,ஆக்ஷன் திகில் என்று பல மடிப்புகளில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

‘கே ஜி.எப் ‘ போன்று  இப்படம் ஒரு முழு விசையுடனான விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும் . டீஸர் மற்றும் ட்ரெய்லர் அடைந்திருக்கும் வெற்றி படத்தின் உருவாக்கத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளதை உறுதி செய்கிறது.

படம் திரையில் தீப்பிடிக்கும் அனுபவத்தையும், பார்ப்பவர் கண்களில் பொறி பறக்கும் பரவசத்தையும் ஏற்படுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது.இதுவரை எத்தனையோ போட்டிகள், பந்தயங்கள் கொண்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கலாம் .இதில் வரும் ஜீப் பந்தயம், மண் சாலைப் பந்தயம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது.இதுவரை திரை காணாத காட்சி அனுபவமாக அது இருக்கும். இதுவரை கேமரா பார்வை படாத  பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது .இப்படத்தின் உருவாக்க பாணி பேசப்படும். படத்தில் பாய்ந்து செல்லும் திரைக்கதை இருக்கை நுனிக்கு இழுத்துக் கொண்டுவரும்.

‘கே ஜி.எப் ‘படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ராட்சசன்’ படப்புகழ் சான் லோகேஷ்  எடிட்டிங் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் ‘புலி முருகன் ‘ புகழ்  ஆர்.பி.பாலா  இப் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும்  தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது.

ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.

சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் வரும்  மோசமான ஆவேசமான மண் சாலைப் பந்தயப் படப்பிடிப்புக்காக மட்டுமே இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன. அதனால்தான் இந்தப் படத்தின் தகுதியறிந்து அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் , டீஸர், மற்றும் ட்ரெய்லர்களை  வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி ,தெலுங்கில் அனில் ரவி புடி,கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார், இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் கபூர்,மலையாளத்தில் பகத் பாசில், உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி ,ஆசிப் அலி ,சிஜுவில்சன் என்று திரைப் பிரபலங்கள்  தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதரவுக் கரம் கொடுத்துப் படத்தை மேலே கொண்டு சென்றுள்ளனர்.டீசரைப் போலவே ட்ரெய்லரையும் பல நட்சத்திரங்கள் வாழ்த்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல் பேசும்போது, “இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்புஅனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.இதில் வரும் சாகசக் காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும். திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும். இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர்கள் , மோஷன் போஸ்டர்கள் போன்றவை பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார்.

“ஒரு பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்” என்று படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.

சினிமா தாகம் உள்ள இளம் திறமைகளால்  இப்படம் முழு வீச்சோடு உருவாகியிருக்கிறது .

இப்படம் டிசம்பர் 10 முதல்  உலகத் திரைகளில்.

 

Read previous post:
0a1e
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘கபளீகரம்’

நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்றன சில குற்றங்கள் காவல் துறைக்கே பெரும் சவாலாக இருக்கும். அப்படி காவல்துறையைக் கதிகலங்க வைத்த லாரி கொள்ளை என்ற உண்மைச் சம்பவத்தை

Close