மோடி டீ ஆத்துன இடம் சுற்றுலா தலம் ஆகிறது!

நரேந்திர தாமோதர தாஸ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகரில் பிறந்தவர். அவரது தந்தை வாட் நகர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு பிளாட்பாரத்தில் டீ கடை நடத்தி வந்தார். மோடி தனது சிறு வயதில் டீ கடையில் தந்தைக்கு உதவியாக இருந்தார். பின்னர், அங்கு தனியாக டீ கடை நடத்தினார். அதன்பின்னர் ஆரியத்துவ கொடுங்கோன்மையை அரசியல் கோட்பாடாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து ஆரியத்துவவாதி ஆனார். அடுத்து குஜராத் முதல்வராகி, இப்போது பிரதமராக இருக்கிறார்.

மோடி பிறந்த ஊரான வாட்நகரை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்ய மத்திய ஆரியத்துவ அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மோடி டீ விற்ற இடம் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

இதற்காக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியை 2 தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, “வாட்நகர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், மோடி சிறுவயதில் டீ விற்பனை செய்த இடம் அதன் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்” என்றார்.