“இனி நடிக்க மாட்டேன்; ‘மாமன்னன்’ தான் என் கடைசி படம்”: உதயநிதி அறிவிப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும், இப்போது அமைச்சரானபோதும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும், தலைவர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களின் ஆலோசனையின்படி சிறப்பாக நிறைவேற்றுவேன்.

அப்போதும், இப்போதும் என்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அது அனைத்துக்கும் என் உழைப்பின் மூலம் பதிலளிப்பேன்.

என் முன்னேற்றத்தில் பத்திரிகையாளர்களின் விமர்சனத்துக்கும் பெரும் அக்கறை இருக்கிறது. அதற்கும் நன்றி.

‘மாமன்னன்’ தான் எனது கடைசி படம். இனி நடிக்க மாட்டேன். கமல் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகி விட்டேன்” என்று கூறினார்.