”அழகி போட்டி நடத்த விடாமல் என்னை மிரட்டுகிறார்கள்”: நடிகை புகார்!

மீரா மிதுன். இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்குப்பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உடபட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப் பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அந்த போட்டி நடைபெறமால் தடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி செய்தியாளர்களிடம் மீரா மிதுன் கூறியதாவது

ஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் ஒருங்கினைப்பாளர் போன் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவரை சந்திக்க நேரில சென்றேன்  நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை கூட்டிவந்து என்னை பயமுறுத்தினார்.

நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல்  ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்க்கினைப்பாளர் இணைந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்த விடாமல க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன்.

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்ப் பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன். அதை நடத்த விடாமல் முறியடித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று சின்ன சின்ன ஹோட்டலில் போய் நடத்த முற்பட்டேன். ஆனால் இந்த இறுதிப் போட்டியாளர்களின்  கனவு, இந்த விழா மிகப் பெரியதாக இருக்கும் என்பது தான். அதை உடைக்க நினைக்கவில்லை. இந்த விழாவை கண்டிப்பாக மிகப் பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்படி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப் பெண்ணாக நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன்” என்றார்.

மேலும் பேசிய பதினாலு போட்டியாளர்களும் தங்கள் கனவுகளையும், மீரா மிதுன் தங்களுக்கு தந்த ஆதரவையும் பற்றி பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். முழுக்க முழுக்க தமிழிலேயே அழகிகள் அனைவரும் பேசிய மேடையாக இது இருந்தது.

 

 

Read previous post:
0a1a
Jeevan’s “ASARIRI”

Sci-fi thrillers have always carried the charm of attracting universal groups not simply for the top-notch technical aspects, but for

Close