பிரபஞ்சனைப் போல் எளிமையாக கர்வம் இல்லாமல் வாழ்வது அரிது!

எழுத்தாளர் திரு.பிரபஞ்சனைப் போல் எளிமையாக ,கர்வமில்லமாமல் வாழ்வதென்பது அரிது. எங்கு பார்த்தாலும் சிரித்த முகத்தோடு உரையாடக்கூடியவர். மனம் திறந்து எல்லோரையும் அங்கீகரிக்கக் கூடியவர்.

மிகச் சிறந்த ப்ல படைப்புகளை அவர் எழுதியிருந்தாலும் வரலாறு முழுக்க வஞ்சிக்கப்பட்ட பெண்களைப் பற்றி எழுதிய “பெண்” மற்றும் அவருடைய பார்வையிலான “மகாபாரதம்” எனக்கு மிகப் பிடித்தவை.

கடைசியாகச் சந்தித்தபோது, அவர் உதவி இயக்குனராகப் பணியாற்றியபோது நடந்த விசயங்களையும், சினிமாவை விட்டுச் சென்றதற்கான காரணத்தையும் நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.

அவரின் மரணம் வேதனையளிக்கிறது,

உங்களின் எளிமையும் சிரிப்பும் எப்போதும் எங்களின் மனதில் நிலைத்திருக்கும். சென்று வாருங்கள் சார்.

மீரா கதிரவன்

திரைப்பட இயக்குனர்

Read previous post:
0a1d
21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு: பிரியா விடை பெற்றார் பிரபஞ்சன்

அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.

Close