தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தோனி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ’எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் – Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.

‘எல்.ஜி.எம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ஏற்கெனவே வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் ‘எல்.ஜி.எம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.