”லோகேஷ் கனகராஜை பார்க்கையில் சந்தோசமாகவும் இருக்கிறது; பொறாமையாகவும் இருக்கிறது!” – ‘லத்தி’ படவிழாவில் விஷால்

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர்.

 இப்படம் வருகிற (டிசம்பர்) 22ஆம் தேதி வெளியாக இருப்பதை முன்னிட்டு, படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஜாங்கிட்,  விஜய் 67 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

0a1a

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’லத்தி’ திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும்,  ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஜாங்கிட் ’லத்தி’ திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர்.

இதன்பின்னர் விழாவில் பேசியோர் பேச்சு விவரம் வருமாறு:-

ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஜாங்கிட்:

திரைப்படங்களில் உயர் அதிகாரிகளின் கதாபாத்திரங்களை தான் படமாக எடுப்பார்கள். ஆனால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ’லத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.  கான்ஸ்டபிள்கள் அதிக அளவில் பங்களிப்பை கொடுக்கிறார்கள்.  அவர்களின் கஷ்டங்களும் அதிகம். அந்த வகையில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை வைத்து படமாக்கிய படக் குழுவினர்களுக்கு காவல் துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்:

ஆக்சன் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என எனக்கு தெரியும். எனவே, வரும் 22ஆம் தேதி வெளியாகும் ’லத்தி’ திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன்.

நடிகர் விஷால்: ‘லத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.  இந்தியில் ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. இது பிரதானமாக விஷாலின் திரைப்படம் அல்ல. இது யுவன் சங்கர் ராஜாவின் திரைப்படம், அதற்கு அடுத்து சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் திரைப்படம்.  அதற்குப் பிறகு தான் என்னுடைய திரைப்படம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பார்க்கையில் சந்தோசமாகவும் இருக்கிறது, அதேசமயம் பொறாமையாகவும் இருக்கிறது. உங்களை (லோகேஷ் கனகராஜை) போலவே நடிகர் விஜய்யை வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என நம்புகிறேன். .

(விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் ”புரட்சி தளபதி…” என்று கத்தினார். அதற்கு…)

இல்லை இல்லை, தளபதி என்றால் விஜய் தான். நான் ’புரட்சி தளபதி’ இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே.

படத்தின் இயக்குனர் வினோத்குமார்: ‘லத்தி’ திரைப்படத்தின் இறுதி 45 நிமிட காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைத்திருக்கிறார்.  டிரைலரில் இருப்பதைவிட படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன.

 

Read previous post:
0a1a
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்

தமிழ்நாடு அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது.  ஆளுநர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான

Close