’லால் சலாம்’ திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ!

ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. ‘ரெட் சல்யூட்’ என ஆங்கிலத்திலும், ‘செவ்வணக்கம்’ என தமிழிலும் பொருள்படும் ‘லால் சலாம்’ என்ற தலைப்பிலான படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களிலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதையை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார். திரைக்கதை: விஷ்ணு ரங்கசாமி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; ஒளிப்பதிவு: விஷ்ணு ரங்கசாமி; படத்தொகுப்பு: பி.பிரவின் பாஸ்கர்; இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

வருகிற (பிப்ரவரி) 9ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது: