யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் ‘கொலையுதிர் காலம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு க்ரைம் நாவலின் தலைப்பு ‘கொலையுதிர் காலம்’. இதே தலைப்பில் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஒரு படம் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’, அஜித் நடித்த ‘பில்லா2’ போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார். இசை – யுவன் ஷங்கர் ராஜா

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.